கட்டுரைகள்

நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் இதுவரை வானவியலின் வளர்ச்சி, பிரபஞ்சவியல், நாம் வாழும் சூரிய குடும்பம் மற்றும் நவீன சார்புக் கொள்கையில் 4 பரிணாமங்களில் அமைந்த காலம், வெளி ஆகியவை அடங்கிய கேத்திர கணிதம் பற்றிய எளிமையான விளக்கம் வரை பார்த்திருந்தோம்.

எமது இந்த மீள்பதிவின் கடைசித் தொடரான 40 ஆம் பாகத்தில் எமது கண்ணுக்குத் தெரியும் வானில் உள்ள பிரபஞ்சத்தின் கூறுகளின் பருமன் ஒப்பீடு குறித்து முக்கிய தகவல்களை புகைப் படங்களுடன் பார்த்தோம்.

இன்றைய பதிவு நட்சத்திரப் பயணங்கள் தொடரின் புதிய பதிவாகும். இத்தொடர் இனிமேல் தினசரி அல்லாது வாராந்தம் வெளிவரும் என்பதையும் அறியத் தருகின்றோம். இன்றைய பதிவு, 'நம் கண்ணுக்குத் தெரியும் வானம்' என்ற தலைப்பின் கீழ் தொடர்கின்றது.

வானவியல் (Astronomy) என்பது எம்மைப் பற்றியது. இதனைக் கற்கும் போது நாம் நம்மைப் பற்றியே அறிய விளைகின்றோம். அதாவது நாம் யார்? என்ற எளிமையான கேள்விக்கு வானவியல் சொல்லும் எளிமையான பதில் இப்பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டம் (Milky Way Galaxy) என்ற அண்டத்தின் விளிம்பில் உள்ள சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் பூமி என்ற கிரகத்தில் வாழும் சிந்திக்கக் கூடிய உயிரினமே நாம் என்பதாகும். அதாவது மனித இனம் பூமிக்கு மேலுள்ள வானத்தின் தோற்றம் குறித்து அறிய விளையும் போது தான் நவீன விஞ்ஞானம் தோன்றியது என்பது புலனாகின்றது.

நாம் எமது பூமியில் இருந்து பகல் மற்றும் இரவு என்ற இரு பொழுதுகளில் வெவ்வேறு தன்மை கொண்ட வானத்தைப் பார்க்க முடிகின்றது. பகல் பொழுதில் சூரியனின் மிகை வெளிச்சம் காரணமாக விண்ணில் உள்ள ஏனைய பொருட்களைப் பார்க்க முடிவதில்லை என்பது கண்கூடு. ஆனால் இரவு நேரத்தில் கார் மேகங்கள் அற்ற அமாவாசைப் பொழுதில் எமது கண்ணுக்குத் தெரியக் கூடிய பிரபஞ்சத்தின் (Observable Universe)பருமன் ஒப்பீடு தான் கடந்த தொடரில் நாம் பார்த்திருந்தோம். இரவில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்கும் போது பூமியின் கிட்டத்தட்ட 100 Km தடிப்பம் கொண்ட வளி மண்டலத்தின் ஊடாகத் தான் அவற்றைப் பார்க்கின்றோம். வளி மண்டலத்தில் ஒளி விலகல் காரணமாகத் தான் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுவது போல் தென்படுகின்றதே அன்றி அவை உண்மையில் மின்னுவதில்லை.

மேலும் 100 Km தடிப்பம் கொண்ட வளி மண்டலத்துக்கு அப்பால் வெளியானது கிட்டத் தட்ட வெற்றிடமாகவே உள்ளது. எம் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்கள் யாவும் 100 இலிருந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவை ஆகும். எப்படி பூமி தனது அச்சில் சுழல்வதால் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கே மறைகின்றதோ அதே போன்று தான் நட்சத்திரங்களும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இரவு வானில் நகர்கின்றன.

எமது இரவு வானில் மிகவும் பிரகாசமான பொருளில் இருந்து பிரகாசம் குறைந்த முக்கியமான கூறுகளின் பருமன் ஒப்பீட்டுப் படம் கீழே தரப்படுகின்றது. இதில் அதிகப் பிரகாசம் கொண்ட சூரியன் -26 மேக்னிடியூட் அளவிலும் வெறும் மனிதக் கண்ணால் பார்க்கக் கூடிய வானின் அதிகபட்ச பிரகாசம் 6 மேக்னிடியூட் அளவிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது தவிர நவீன வானவியலில் இரவு வானில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் தென்படக் கூடிய அனைத்து நட்சத்திரங்களும் இதுவரை 88 நட்சத்திரத் தொகுதிகளாக வானியலாளர்களால் வகைப் படுத்தப் பட்டுள்ளன. இந்த நட்சத்திரத் தொகுதிகளுக்கான எல்லைகளை சர்வதேச வானியல் கழகம் (IAU)வகுத்துள்ளது. இதன் மூலம் வானில் தெரியும் குறிப்பிட்ட ஒரு நட்சத்திரம் எந்த நட்சத்திரத் தொகுதியில் உள்ளது என ஒரு வானியலாளரால் கணிக்க முடியும்.

இந்த நட்சத்திரத் தொகுதிகளின் பெயரும் அவற்றின் விளக்கமும் அவற்றில் உள்ள மிகவும் பிரகாசமான நட்சத்திரத்தின் பெயரும் அதன் மேக்னிடியூட்டும் அடங்கிய அட்டவணை கீழே:

 


பூமியின் வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் தனித்துவமாகத் தெரியும் நட்சத்திரத் தொகுதிகளின் வரைபடம் கீழே :

வடவரைக் கோளம்

தென் அரைக்கோளம்


இந்த நட்சத்திரத் தொகுதிகள் அனைத்திலும் மிகவும் பெரியது ஹைட்ரா (Hydra) எனப்படும் நீர் பாம்பு ஆகும்.

மிகவும் சிறிய நட்சத்திரத் தொகுதி தென் சிலுவை (Crux the cross) ஆகும்.

இந்த நட்சத்திரத் தொகுதிகள் அனைத்திலும் உள்ள தனிப்பட்ட நட்சத்திரங்கள் யாவும் பெரும்பாலும் இன்னொரு நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. சில தொகுதிகளில் ஒரு நட்சத்திரம் பூமிக்கு மிக அருகேயும் இன்னொன்று வெகு தொலைவிலும் கூட அமைய முடியும். ஆனால் வானியல் கல்வி வளர ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நட்சத்திரங்களைத் தொகுதிகளாக வகுத்து வந்துள்ளான். மேலும் இத்தொகுதிகளில் உள்ள நட்சத்திரங்களின் பிரகாசத்தை கிரேக்க எழுத்து வடிவில் அல்ஃபா (α),பீட்டா (β) மற்றும் காமா (γ) என்று தொடங்கி கிட்டத்தட்ட 24 குறியீடுகளால் வகைப் படுத்தப் பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர் பாருங்கள்...

நன்றி - தகவலுதவி, Horizons (Michael.A.Seeds)

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)

நட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)

நட்சத்திரப் பயணங்கள் 33 (பிரபஞ்சவியல் 16, காலமும் வெளியும் 3)

நட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)

நட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)

நட்சத்திரப் பயணங்கள் 36 (பிரபஞ்சவியல் 19, காலமும் வெளியும் 6)

நட்சத்திரப் பயணங்கள் 37 (பிரபஞ்சவியல் 20, காலமும் வெளியும் 7)

நட்சத்திரப் பயணங்கள் 38 (பிரபஞ்சவியல் 21, காலமும் வெளியும் 8)

நட்சத்திரப் பயணங்கள் 39 (பிரபஞ்சவியல் 22, காலமும் வெளியும் 9)

நட்சத்திரப் பயணங்கள் 40 (பிரபஞ்சத்தின் கூறுகளின் பருமன் ஒப்பீடு)

 

- 4 தமிழ்மீடியாவுக்காக: நவன்

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.