கட்டுரைகள்
Typography

 

27. நல்லவை எண்ணல் வேண்டும். டாலர்நகரம் தொடர் என்னது திடீரென 20 அத்தியாயத்திலிருந்து 27ம் அத்தியாயத்திற்குப் பாய்ந்து விட்டது என யோசிக்கின்றீர்களா..? உண்மையில் இது ஒரு பாச்சல்தான். 4தமிழ்மீடியாவில் கடந்த 20 வாரங்களாக, வாரந்தோறும்  வெளிவந்த 'டாலர் நகரம்' சிறப்புத் தொடர் கண்டிருக்கும் இந்தப் பாச்சல் ஒரு ஆரோக்கியமான பாச்சல்.

ஆம்! டாலர் நகரம் புத்தகமாக வெளிவந்துள்ளது. 4தமிழ்மீடியா படைப்பாய்வகத்தின் நெறிப்படுத்தலில் 4தமிழ்மீடியா வெளியீடாக அமேசன் தளத்தில் வாங்கிடலாம். எண்ணிய முடிதல் வேண்டும் எனும் பாரதி, நல்லவை எண்ணல் வேண்டும் என்றான். அவ்வாறான நல் எண்ணம், எண்ணிய செயலாக வடிவம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தின் தொழில் நகரம் திருப்பூர். திருப்பூருக்கு வெளியேயுள்ள ஒருவரால் திருப்பூரைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடியது இவ்வளவே. அந்தத் தொழில் நகரின் மகிழ்ச்சிகளை, துயரங்களை, மறைந்திருக்கும் பக்கங்களை,  அனுபவித்து,  ' டாலர் நகரம் ' என எழுத்துக்களில் வடித்திருக்கின்றார் ஜோதிஜி.

இதுவரையில் வெளிவந்த இருபது அத்தியாயங்களையும் தொடர்ச்சியாக வாசித்த வாசகர்கள், அந்நகருக்கான வாழ்நிலை அனுபவங்களை, தங்கள் வாசிப்பின் போது அனுபவித்திருப்பர். ஏனெனில் உரிய இடங்களில் எம்மை வாழ்ந்து பார்க்க வைக்கும் ஜோதியின் எளிமையான எழுத்து நடை.

இப் புத்தகத்தின் இருபத்தாறு அத்தியாயங்களை எழுதிய ஜோதிஜி, இதன் இருபத்தியெழாவது அத்தியாயத்தை, முடிவுரை போல நீங்கள் எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இது முடிவுரையல்ல முகவுரை. இத் தொடர் குறித்த என் அனுபவங்களாக அமைவதனால், இது உங்களுரையாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதனையும், இத் தொடரின் இறுதி அத்தியாயங்களையும், நீங்கள் புத்தகத்தில் வாசிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இனிய நட்புடன்

- மலைநாடான்
4தமிழ்மீடியா குழுமம்.

டாலர் நகரம் புத்தகத்தை அமேசன் தளத்தில் வாங்கிட இங்கே

டாலர் நகரம் - 20

BLOG COMMENTS POWERED BY DISQUS