கட்டுரைகள்
Typography

புளூட்டோ கிரகத்தைத் தற்போது ஆராய்ந்து வரும் நாசாவின் நியூ ஹொரிசன்ஸ் செய்மதி அதன் தரை மேற்பரப்பில் உறை நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இது தவிர புளூட்டோவில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு மணல் குன்றுகள் இருப்பதும் நியூ ஹொரிசன்ஸின் புகைப் படங்களில் தெரிய வந்துள்ளது.

சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து மிக அதிக தொலைவில் அமைந்துள்ள கோளான புளூட்டோ அதன் சுற்று வட்டப் பாதை காரணமாக ஒரு கிரகம் என்ற அந்தஸ்தைப் பெறவில்லை. ஆனால் இக்கிரகம் இதற்கு முன்பு உள்ள நெப்டியூனை விட சூரியனுக்கு மிக அண்மையில் தனது சுற்று வட்டப் பாதையிலும் நெப்டியூனை விட மிகத் தொலைவிலும் சென்று வருகின்றது. புளூட்டோ தொடர்பான தகவல்களை 4தமிழ் மீடியாவின் நட்சத்திரப் பயணங்கள் தொடரின் சூரிய குடும்பம் பகுதியில் காண முடியும். இதற்கான லிங்க் இணைப்பு கீழே :

நட்சத்திரப் பயணங்கள் 17 (சூரிய குடும்பம் : புளூட்டோ)

புளூட்டோ கிரகத்தின் மணல் குன்றுகளில் தான் உறைந்த நிலையில் மீதேன் வாயு காணப்படுகின்றது. இவை 200 முதல் 300 மைக்ரோ மீட்டர்கள் விட்டம் கொண்ட நுண் துணிக்கைகளாக உள்ளன. புளூட்டோவில் மிக அதிகளவு மீதேன் வாயு இருப்பது உறுதி செய்யப் படுமிடத்து அங்கு பக்டீரியா அல்லது வைரஸ் வடிவிலான நுண்ணியிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS