கட்டுரைகள்

கடந்த நட்சத்திரப் பயணங்கள் தொடரில் இரவு வானில் எமக்குத் தென்படும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் தொகுதிகள், பூமியின் வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் விசேடமாகத் தென்படும் நட்சத்திரத் தொகுதிகளின் வரை படம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.

பொதுவாக வானவியல் குறித்த கல்விக்குப் புதியவர்களுக்கு நட்சத்திரங்களின் பிரகாசத்தை அளக்கும் மேக்னிடியூட் அளவீடு கணித ரீதியில் குழப்பத்தைத் தருவதாக இருக்கும்.

இது தொடர்பாக பிரபல கணிதவியலாளரான ஹிப்பார்ச்சுஸ் இன் விளக்கம் வருமாறு, மேக்னிடியூட் (magnitude) அளவீடானது எதிர்ப் புறமானது ஆகும். அதாவது ஒரு நட்சத்திரத்தின் மேக்னிடியூட் இலக்கம் பெரிதாக இருந்தால் அந்தளவுக்கு அது பிரகாசம் குறைந்தது ஆகும். இதன் அடிப்படையில் முதலாம் வகை நட்சத்திரங்கள் 2 ஆம் வகை நட்சத்திரங்களை விடப் பிரகாசமானது ஆகும். ஆனால் பிரகாசம் தொடர்பான கணிதத் தொடர்பு இவ்வாறு வேறுபடுகின்றது. இரு நட்சத்திரங்களது பிரகாசம் 1 மேக்னிடியூட்டினால் வேறு பட்டால் ஒன்று மற்றையதை விட 2.5 மடங்கு பிரகாசமானதாக இருக்கும். ஆனால் இந்த நட்சத்திரங்கள் 2 மேக்னிடியூட்டினால் வேறுபட்டாலோ ஒன்று மற்றயதை விட இரு 5 மடங்கு பிரகாசமாக அல்லாது 2.5 * 2.5 மடங்கு அதாவது 6.25 மடங்கு பிரகாசமாக இருக்கும்.

இதன் அடிப்படையில் இரு நட்சத்திரங்களுக்கான பிரகாசத்தின் வேறுபாடு m(a)-m(b)=2.5log(I(b)/I(a)) என்ற கணித சூத்திரத்தின் மூலம் பெறப்படும். (m-மேக்னிடியூட், I-பிரகாசத்தின் செறிவு விகிதம், a,b-நட்சத்திரங்கள்) இரு நட்சத்திரங்களுக்கான மேக்னிடியூட் வித்தியாசத்துக்கு ஏற்ற பிரகாசத்தின் அடர்த்தி விகிதம் கீழே உள்ள அட்டவணையில் தரப்படுகின்றது.

நாம் வானத்தை அவதானிக்கும் போது எப்போதும் குறித்த பொருளின் கடந்த காலத்தையே பார்க்கின்றோம். வானத்தை அவதானிக்கும் இந்தக் கணத்திலேயே ஒரு விண்மீன் அல்லது விண் பொருள் இனது நிலை என்ன என்பதைக் காண்பதற்கான வழி நமக்கு சாத்தியம் அற்றதாகும். எமது பிரபஞ்சத்தில் மிகவும் தூரத்தில் உள்ள விண்பொருட்கள் பூமியில் இருந்து அமைந்துள்ள தூரத்தை ஒளியாண்டுகளால் நாம் கணிக்கின்றோம். அதாவது எமது கண்ணுக்குத் தெரியும் ஒளியானது ஒரு வருடத்துக்கு 5.9 டிரில்லியன் மைல்கள் பயணிக்கின்றது எனக் கணிக்கப் பட்டுள்ளது.

விநாடிக்கு 186 000 மைல் வேகத்தில் பயணிக்கும் ஒளியை விடப் பிரபஞ்சத்தில் மிக வேகமான பொருள் இல்லையென பொதுச் சார்புக் கொள்கை சொல்கின்றது. இதனால் பூமியில் இருந்து மிக மிகத் தொலைவில் உள்ள பொருட்களது தூரத்தை அளக்க ஒளியாண்டு என்ற அளவீட்டைப் பயன்படுத்துகின்றோம். இந்த அளவீட்டில் ஒளியாண்டு என்று வருவதால் இது நேரத்தை அளக்கும் அளவீடு எனப் பொதுவாக மக்கள் குழப்பம் அடைய முடியும். ஆனால் இது மனிதனின் சிறிய அளவீடுகளால் அளக்க முடியாத மிகத் தொலைவில் உள்ள விண்பொருட்களது தூரத்தை அளக்கும் அலகு ஆகும்.

சூரியனிடம் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனுக்கு அப்பால் எமது பூமிக்கு அருகே இருப்பதாக அடையாளம் காணப்பட்ட ப்ராக்ஸிமா செண்டூரி என்ற நட்சத்திரம் பூமியில் இருந்து 4 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பூமியில் எமது வெறும் கண்களால் காணக் கூடிய மிக அதிக தொலைவில் உள்ள பொருள் அண்ட்ரோமிடா என்ற அண்டம் (Andromeda Galaxy) ஆகும். இங்கிருந்து எமது கண்களால் தற்போது நாம் அவதானித்துக் கொண்டிருக்கும் ஒளி 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே புறப்பட்டு விட்டது.

இந்த அண்ட்ரோமிடா கேலக்ஸியில் நிகழ்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது என்பது தொடர்பில் நாம் இன்னமும் 2 மில்லியனுக்கும் அதிகமான வருடங்கள் கழித்தே அவதானிக்க முடியும். மிகவும் அடர்த்தியுடைய சில நட்சத்திரங்கள் 10 இலிருந்து 20 மில்லியன் ஆண்டுகள் வரையில் தான் உயிர் வாழும். இதனால் நாம் வெகு தூரத்தில் கிட்டத்தட்ட 50 மில்லியன் தூரத்துக்கும் அப்பால் உள்ள ஒரு கேலக்ஸியையும் அதில் உள்ள மிகவும் பிரகாசமான நட்சத்திரங்களையும் தொலை காட்டி மூலம் இப்போது அவதானிக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். அப்படியானால் உண்மையில் நிகழ் காலத்தில் குறித்த நட்சத்திரங்கள் சுவடே இல்லாது அழிந்து போய் இருக்கவும் 10 அல்லது 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அவை வெளியிட்ட ஒளியைத் தான் தற்போது நாம் பார்க்கின்றோம் என்றும் நீங்கள் அறிந்தால் வியப்படைவீர்கள்.

மேலும் ஹபிள் போன்ற சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகளால் அவதானிக்கப் பட்ட மிகத் தொலைவில் உள்ள அண்டங்களுக்கு நாம் அதாவது மனித இனம் தமது வெளிப்பாட்டை ஒளிக் கற்றை வடிவில் சமிக்ஞை அனுப்ப முடிவெடுத்தால் அது முட்டாள் தனமான முடிவாகத் தான் இருக்கும் என்றும் வானியலாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குறித்த கேலக்ஸிக்களுக்கு நாம் அனுப்பும் ஒளி சமிக்ஞை சென்று மீளவும் பூமிக்குத் திரும்ப பில்லியன் கணக்கான வருடங்கள் தேவைப் படும். ஆனால் அதற்குள் அதாவது இன்றில் இருந்து 5 அல்லது 6 பில்லியன் வருடங்களுக்குள் எமது சூரியன் அளவில் பெரிதாகி அருகே உள்ள கிரகங்களைத் தன் வசம் ஈர்த்து அழித்து விடும் என்றும் இதில் பூமியும் ஈர்க்கப் பட அல்லது பூமியில் கடும் வெப்பம் காரணமாக உயிரினங்கள் அனைத்தும் அழிந்து விடவும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இனி வானவியலில் ஐசக் நியூட்டனின் ஈர்ப்புக் கோட்பாடுகள் மற்றும் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாடுகள் என்பவை எவற்றைத் தெளிவு படுத்துகின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.

ஐசக் நியூட்டன் :

1.ஏன் நிலவு பூமியையும், பூமி சூரியனையும், சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தையும், அண்டங்கள் ஒன்று மற்றையதையும் ஒழுக்கில் சுற்றி வருகின்றன?
2.ஏன் ஒரு நட்சத்திரம் அல்லது கிரகம் கோளமாக உள்ளது?
3.விண்வெளியில் வாயுக்கள் மற்றும் தூசுப் படலங்கள் இணைந்து ஏன் புதிய நட்சத்திரங்களைத் தோற்றுவிக்கின்றன?


அல்பேர்ட் ஐன்ஸ்டீன் :

1.சூரியனுக்கு அண்மையில் உள்ள நட்சத்திரங்கள் சூரிய கிரகணத்தின் போது ஏன் சூரியனில் இருந்து விலகித் தெரிகின்றன?
2.ஏன் கருந்துளைகள் வெளிப்படுகின்றன?
3.விண்வெளியை ஆழமாக நோக்கும் போது ஈர்ப்புக் காரணமாக ஒளி வளைதல் (Gravitational lensing) எவ்வாறு ஏற்படுகின்றது?
4.பூமியின் சுழற்சியில் ஏற்படும் சிறு வேறுபாடு அதனைச் சுற்றியுள்ள வெளியையும் நேரத்தையும் ஏன் பாதிக்கின்றது? (செய்மதி மூலம் ஊர்ஜிதப் படுத்தப் பட்ட அவதானம்)
5.இரு கருந்துளைகள் மோதிக் கொண்டால் ஏற்படும் ஈர்ப்பு அலைகள் எவ்வாறு பில்லியன் ஒளி வருடங்கள் தாண்டியும் விண்பொருட்களை எவ்வாறு பாதிக்கின்றது?

நம் கண்ணுக்குத் தெரியும் வானம் என்ற தலைப்பில் அடுத்த வாரமும் நட்சத்திரப் பயணங்கள் தொடரை எதிர் பாருங்கள்..

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)

நட்சத்திரப் பயணங்கள் 36 (பிரபஞ்சவியல் 19, காலமும் வெளியும் 6)

நட்சத்திரப் பயணங்கள் 37 (பிரபஞ்சவியல் 20, காலமும் வெளியும் 7)

நட்சத்திரப் பயணங்கள் 38 (பிரபஞ்சவியல் 21, காலமும் வெளியும் 8)

நட்சத்திரப் பயணங்கள் 39 (பிரபஞ்சவியல் 22, காலமும் வெளியும் 9)

நட்சத்திரப் பயணங்கள் 40 (பிரபஞ்சத்தின் கூறுகளின் பருமன் ஒப்பீடு)

நட்சத்திரப் பயணங்கள் 41 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம்)

 

- 4 தமிழ்மீடியாவுக்காக: நவன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கடந்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடித்த கதாநாயகன் விஜய்சேதுபதி. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் அவரே அதிக எண்ணிக்கையில் படங்களை ஒப்புக்கொண்டுவருகிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தரமான நகைச்சுவையின் பிதாமகன் ’கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு நல்ல நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள்.

பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ருக்மணி விஜயகுமார்,