கட்டுரைகள்
Typography

நமது பூமிக்கு அடியில் இதுவரை யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு அதாவது குவாடிரில்லியன் (1 இற்குப் பின் 15 பூச்சியங்கள்) டன்னுக்கும் அதிகமான கணக்கில் வைரங்கள் உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இவை யாவும் நம்மால் எட்ட முடியாத அளவுக்கு அதாவது 100 மைல் ஆழத்தில் உள்ளதாம்.

இந்தளவு ஆழத்துக்கு மனித இனம் வரலாற்றில் இதுவரை குழி தோண்டியது (drilling) கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு பற்றி அமெரிக்காவின் MIT என்ற கல்வி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் கூறுகையில் இந்த வைரங்கள் யாவும் பூமியின் மையத்துக்கு அருகே மிக ஆழத்தில் உள்ள டெக்டோனிக் தகடுகளுக்கு கீழே உள்ள மேண்டில் ராக் என்ற பாறைப் படிமத்தில் இணைந்து காணப் படுகின்றனவாம்.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் குறித்து தகவல் சேகரிக்கும் போது தான் எதேச்சையாக வைரங்கள் குறித்த இந்தத் தகவலும் பெறப்பட்டுள்ளது. அதிலும் இந்த அனர்த்தங்கள் ஏற்படும் போது வெளிவிடப் படும் விசேட ஒலி அலைகளைப் பயன்படுத்தித் தான் இந்தளவு எண்ணிக்கையான வைரங்களின் தொகை இருக்கலாம் என ஊகிக்கப் பட்டுள்ளது. அதாவது பாறைகளை விட வைரங்களின் ஊடாக ஒலி அலையானது இரு மடங்குக்கும் அதிக வேகத்துடன் பயணிப்பதை வைத்து இந்த அனுமானம் பெறப்பட்டுள்ளது.

மிக அரிதான எரிமலை வெடிப்பு சம்பவங்களின் போது மிகவும் அடர்த்தியான வைரங்கள் வெளியேறும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே இந்த மதிப்பு மிக்க வைரங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகின்றது. முன்னதாக வானவியல் கல்வியில் நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே உள்ள வைரங்களால் தான் விண்ணில் விளக்கம் அளிக்கப் பட முடியாத சில திடீர் ஒளி விளைவுகளுக்குக் காரணம் என்றும் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS