கட்டுரைகள்

ஆடி பிறந்துவிட்டது நமக்கு நினைவில் வருவது உழுததம்மாக்கூழ். இதனை பனங்கட்டி சேர்த்துக்காச்சியும் கொழுக்கட்டை அரிசிமாவினாலும் பயறுப்பருப்பும் பனங்கட்டியும் சேர்த்தும் அவிப்பர்.

முற்றின தேங்காயின் பூவும் பாலும் சேர்த்து இரண்டையும் செய்வர். இந்த உணவு வகைகள் பாரம்பரிய தமிழர் பண்பாட்டில் முக்கியமான இடத்தைப் பிடிப்பவை. உணவுப் பண்டம் கூழ்போன்ற நீராகாரம் இலகுவில் ஜீர்ணிக்கும் தன்மையது. அதைச்செய்து உறவினர் நண்பர்கள் ஓன்றுகூடி ஆடிமாதப் பிறப்பு அன்று உண்பர். ஆசியா நடுகளில் பெரும்பாலும் வெப்பமான பிரதேச்ங்களில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகள் விரும்பி உண்பதற்கேற்றவாறு தயாரித்து கொடுப்பர். ஆடிமாதத்தில் காற்று வெப்பமாக வீசும். அத்தோடு காற்றில் தூசுகள பரவும். நோய்க்கிருமிகள் தொற்று ஏற்படாது காக்க இக்குளிர்ச்சி தரும் உணவு அடிக்கடி செய்து சாப்பிடக் கொடுப்பர்.

முன்பு பூமியில் மழை ஆறுமாதத்திற்கும் வெயில் ஆறுமாதத்திற்கும் சூழல் அமைந்து காணபடும். ஆகவே ஆடியில் காற்று மழை என்று காணப்படும் போது உஸ்ணம் பூமியில் இருந்து வெளிப்படுவதால் புதிய வகையான வெப்பு நோய்கள் உருவாகி விடுகின்றன. இதன் காரணமாகவே அந்நாளில் உணவுப் பழக்க வழக்கங்களில் இவற்றைக் கடைபிடித்து வரலாயினர். அம்மன் ஆலயங்களில் வேப்பிலை மாலை சாற்றுதல், எலுமிச்சை மாலை சாற்றுதல், கூழ் காய்ச்சிப் படைத்தல், நீர்மோர் பானகம், எலுமிச்சைபழத்தில் பானகம் இவற்றையும் அம்மனுக்கு படைத்து வழிபாடாற்றினர். தாம் மட்டும் கூழையோ பானகத்தையோ தனியே குடிக்காது அயலவர் சுற்றத்தவருக்கும் கொடுத்தனர்.

உழுத்தம் மாககூழும் கொழுக்கட்டையும் கூடி உண்டனர். அதன் மூலம் எல்லாருக்கும் நோய் பரவாது தடுத்தனர். அத்தோடு ஆடியில் தேடி விதை விதைத்தனர். உணவுப்பயிர்கள் விதைகள் அவற்றைப் பக்குவமாய் நட்டனர். பூமித்தாயை வேண்டுவர். மாரியும் மனங்குளிர மழையும் பொழிந்து விவசாய நிலங்கள் யாவும் பசுமையுடன் விளைந்து சிரித்தன பயிர்கள். விதைக்கும் பயிரினம் நன்கு வளர்ச்சி அடைய இறை நம்பிக்கை கொண்டு ஆலயங்களில் கூட்டு வழிபாடுகள் நடத்தினர். நம்பிக்கை தளராது உழைத்தனர். அந்நாளில் வானமும் பூமியும் பொய்க்கவில்லை, பசுமை மாறாது குளிச்சியையும் வெப்பத்தையும் இயற்கை அளவோடு அழகோடு கொடுத்திருந்தது. மரங்கள் மனிதர்க்கு எவ்வளவு முக்கியம் அதை அன்று உணர்ந்திருந்தனர். ஆனால் இன்று அந்த மரங்களில் இருந்து வீசும் சுத்தாமான காற்றை சுவாசித்து விட்டு மரங்களை அழிப்பதில் குறியாக இருக்கின்றோம்.

சனத்தொகைப் பெருக்கத்தினால் மரத்தின் பாவனை அதிகரித்துச் செல்கிறது. நாம் மரங்களை நாட்டுவதில் அக்கறை கொள்வதில்லை. இருக்கும் மரங்கள் அழியாது காக்க வேண்டும் எனும் எண்ணமும் இல்லாது போய் விட்டது. ஆனால் அக்காலத்தில் முக்கியமாக இம்மரங்கள் மதக்கலாச்சாரங்களால் மதவழிபாட்டுத் தலங்களில் வளர்க்கப்பட்ட அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பெரிய மரங்களாக அரச மரம், ஆலமரம், அத்திமரம், புளியமரம், வேப்பமரம், வில்வமரம், விளாமரம், நெல்லிமரம் முதலிய பெரிய மரங்கள் சிரஞ்சீவியானவை. அவை இன்றும் கோவில்களுக்கு அருகில் இருக்கும். அதன் பயன் அளவிடமுடியாதது. சுத்தமான சுவாசக்காற்றை நாம் சுவாசிக்க ஏதுவாக அமைந்திருந்தமையால் நோயின் தாக்கமும் குறைவாகவே இருந்தன. இப்பொழுது காலநிலை மாற்றத்தினால் மனிதர் புதிய வகை நோய்க்கு ஆளாகின்றனர்.

சுத்தமான காற்றும் நல்ல நீரும் மனிதருக்கு அவசியம். அது சுத்தமாக இன்று இல்லாமல் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். மக்கள் கிராமப்புறங்களிலிருந்து அடிப்படைத்தேவை கருதி நகர்ப்புறங்களை நாடினர். கிராமத்து மண், மரஞ்செடிகொடிகள், கிணறு, குளம், ஆறு இவற்றைக் கவனிக்க மக்கள் இன்றிப் அவர்கள் புலம்பெயர பசுமை குறைய அது காரணமாயிற்று. பஞ்சபூதங்களாகிய மண், விண், நீர், தீ, வளி ஆகியன இயற்கையாக இருக்கின்றபோதிலும் மனிதன் செயற்கையாக வாழத்தலைப்பட்டதால் இவை மாற்றம் பெறத் தொடங்கின. ஓசோன் படலத்தின் மாற்றம் தொடங்கி, இயற்கை பேரழிவுகள், சீரற்ற காலநிலைகள் என அதிகரித்துச்செல்கிறது.

நாமே நமது பூமியை வளம் கொழிக்கச் செய்ய வேண்டும். இயற்கையை நேசித்து சுவாசித்து தெய்வமாக வழிபட்டு மதித்து இரசித்து அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்ந்தார்கள். பூமியும் பசுமை மிக்கதாக இருந்தது. இக்கால மனிதர்களாகிய நாம் நவீன விஞ்ஞானயுகத்தில் புதிது புதிதாய் ஒவ்வொன்றையும் கண்டு பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறோம். ஆனால் இதை எங்கிருந்து எடுக்கிறோம் இந்த இயற்கையில் இருந்துதானே, அதை மறந்து, நேசிப்பதையும் மறந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறறரிவு படைத்த நாம் எம்முடன் வாழும் எனைய உயிரினங்களையும் மதித்து நேசிக்கவும் மறந்து விட்டோம். மரமும் உயிர்தானே என எண்ணிப்பார்ப்பது அவசியம்.

நாம் உயிர் வாழ காற்றைத் தருவது மரங்கள், மழைநீரைத் தருவது மரங்கள், பசிக்கு உணவைத்தருவது மரங்கள், இருக்க வீட்டைத்தருவது மரங்கள், எரிக்க உணவைச் சமைக்க உதவுவது மரங்கள். ஐம்பூதங்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது வாயு என்றும் வளி என்றும், காற்று, என்றும், பிராணன் என்றும் இப்படி எல்லா உயிருக்கும் மூச்சாக விளங்கும் காற்றே ஆகும். இத்தூய காற்றை தரவல்ல மரங்களை அழியாது பாதுகாப்போம். ஒரு மரத்தை வெட்டினால் ஐந்து மரக்கன்றாவது நடுவோம்.

கட்டடங்கள் பெருகி வரும் நகர்ப்புறங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் மரங்கள் வளம் மிகமிகக் குறைந்து வருகிறது. அக்குடியிருப்புகளில் சாடிகளில் வளர்க்கக்கூடிய மூலிகைச்செடிகள் துளசி, திருநீற்றுப்பச்சை, விஸ்ணுகிராந்தி, அறுகும்புல், வல்லாரை, பொன்னாங்கானி ,தூதுவளை, கற்பூரவல்லி, எலுமிச்சை, செம்பருத்தி, மல்லிகை முல்லை ரோஜா போன்ற ஏதேனும் ஒன்றை நாட்டி பராமரித்து வெப்பத்தை தவிர்த்து குளிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

தரைவீடுகளில் வசிப்போர் போதிய இடமிருப்பின் வாழைமரங்கள், பழமரங்கள், பூமரங்கள், காய்கறி செடி கொடிகளை நாட்டி அதில் வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். தோட்டங்களை பெரு நிலப்பரப்புகளை பயிர் செய்யாது வெறுமனே வைத்திருக்காது அவற்றில் விவசாயம் செய்யலாம். முக்கியமாக நெல்பயிர்ச்செய்கை அதிக அளவில் விளைவிக்கலாம். வெங்காயம் மிளகாயம், தானியங்கள் காய்கறிகள் மாம்பழம் கொய்யா, எலுமிச்சை தோடை பலாமரம் விளாம்பழம் அன்னாசி, நெல்லிக்காய் புளி இப்படி பலவிதத்திலும் உற்பத்தி செய்யலாம். பனைவளம். தென்னை வளம், கமுகு, வேம்பு, இப்படி மண்வளத்திற்கு ஏற்ப எப்படி பயிரினங்களை உற்பத்தி செய்யலாம், என்று அருகி வரும் பயிர்கள் உயிர்ப்பிக்க முனைய வேண்டும். அவற்றின் மூலவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு தென்னை மரத்தில் அது ஐந்து வருடத்தின் பின்காய்ப்பதாய் இருந்தாலும், பத்து வருடத்தின் பின் காய்ப்பதாய் இருந்தாலும், அதில் ஐந்து தேங்காய்களையாவது நன்கு முற்றவிட்டு காய்ந்தபின் அதை நீரில் ஊறவைத்து மூன்று மாதங்களுக்கு குறையாது ஊறியபின் அதில் முளைவந்து இலை துளிர்த்து வரும்போது தென்னம்பிள்ளையை ஐந்தடிக்கு ஒன்றாக இடைவெளி விட்டு நாட்டி தினமும் நீருற்றி வளர்க்க வேண்டும். அதற் கிடையில் ஊடுபயிர்களாக பழக்கன்றுகள் காய்கறிகள் இவற்றை நடலாம்.

வரண்ட பிரதேசங்களில் உவர்மணற்தரையில் அதிகம் வளரும் கற்பகத்தரு எனப்போற்றப்படும் பனை மரம் இம் மரம் பெரிதும் மனிதர்க்கு அதிக பயன் தருவதாக உள்ளது. இம்மரமும் ஐந்து முதல் பத்து பதினைந்து வருடத்தின் பின்பு முழுப்பயனைத் தருகிறது. ஆனால் இம்மரம் முழுவளர்ச்சி அடைந்த பின் இதன் பயன் அள்விடமுடியாதது. குருத்தோலை வந்ததும் பாய் பெட்டி சுளகு பை கடகம் என் பாவனைக்கு பல விதத்தில் உதவுகிறது. பனைஓலை வேலி அடைக்கவும் வீட்டின் கூரை மேயவும் உதவுகிறது. மரம் வீட்டுக் கூரைமரங்களுக்கு உதவும். பனங்காய் காய்த்ததும் பிஞ்சு நொங்கு என்று அதைவெட்டி நீரைப்பருகுவர். பனம்பழம் முற்றிப்பழுத்ததும் அதை பினைந்து பனியார்ம் செய்து உண்பர். வெயிலில் உலர்த்தி பினாட்டு என்று உண்பர். பனம்பழவிதைகளை சேகரித்து மணலினுள் புதைத்து வைப்பர்.மூன்று நான்குமாதங்களின் பின்னர் கிழங்காகும் அதை அவித்து உன்பர். வெயிலில் உலர்த்தி காயவைத்து இடித்து மாவாக்கி பிட்டு கழி செய்து உன்பர் இப்படி பனை மரத்தில் இருந்துகிடைக்கும் அனைத்து பொருட்களும் மிகுந்தபயன் தரும்.

இம்மரத்தின்உற்பத்தியைப் பெருக்க காயை அதாவது நொங்கை வெட்டாது பாதுகாத்து முற்றிபழங்களின் விதைகளை விதைத்து அதிக மரங்களை உற்பத்தி செய்து நிலவளத்தை நீர்வளத்தை பாதுகாத்து உயிர்களை உய்விப்போம். உயிர்களை வதைக்காது உற்பத்தியை ஊக்குவிக்க அனைத்து உயிர்களும் எழுச்சி அடையும்.

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.