கட்டுரைகள்
Typography

சமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது.

பதிலுக்கு இந்த மர்ம பேர்முடா முக்கோணத்தில் மறைந்து போகும் கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு அதில் மிக உயரமாக எழும் அசாத்தியமான அலைகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

முக்கியமாக Southampton பல்கலைக் கழக நிபுணர்களது கூற்றுப் படி இப்பகுதியில் அதிகபட்சமாக 100 அடி வரை கூட அலைகள் எழும் என்று கூறப்படுகின்றது. புளோரிடா, பெர்முடா மற்றும் போர்ட்டோ ரிக்கோ ஆகியவற்றுக்கு இடையே உள்ள இந்த முக்கோணப் பகுதியில் வரலாற்றுக் காலம் முதற்கொண்டு ஆயிரக் கணக்கான கப்பல்கள் மற்றும் படகுகளும் பல விமானங்களும் கூடக் காணாமற் போயுள்ளன. மேலும் இந்தளவுக்கு அதிக உயரத்துக்கு அலைகள் எழுவதற்கு வடக்கு மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள இரு புயல் வலயங்களும் இப்பகுதியில் இணைவது என்பது கூறப்படுகின்றது.

எனினும் உரிய கால நிலையில் இந்த முக்கோணப் பகுதிக்கு அண்மையாக கடற் பயணம் மேற்கொள்வது என்பது எப்போதும் ஆபத்தாக இருப்பதில்லை என விஞ்ஞானிகள் தற்போது கூறுகின்றனர். மேலும் தட்டையான மேற்பரப்பைக் கொண்ட படகுகளால் இவ்வளவு வீரியமான அலைகளையும் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் நம்பிக்கை அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்