கட்டுரைகள்

சுமார் 7 வருடங்கள் பயணித்து சூரியனை நெருங்கி ஆய்வு செய்யவுள்ள நாசாவின் பார்க்கர் சோலார் செய்மதி புறப்பட்டு ஒரு மாதத்தில் தனது பயணப் பாதையில் எடுத்த வண்ணப் புகைப்படங்கள் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளன.

செப்டம்பர் 9 ஆம் திகதி WISPR எனப்படும் இந்த செய்மதியின் கேமராவால் இப்படங்கள் எடுக்கப் பட்டுள்ளன. இப்புகைப்படங்களில் சூரியன் தென்படவில்லை என்ற போதும் பால்வெளி அண்டத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களும் தூரத்தில் வியாழக் கிரகமும் தெரிகின்றன. ஆகஸ்ட் 12 இல் செலுத்தப் பட்ட பார்க்கர் சோலார் செய்மதி சூரியனுக்கு மிக நெருக்கமாக 3.8 மில்லியன் மைல்கள் வரை செல்லவுள்ளது.

முக்கியமாக சூரியனின் வெளி மேற்பரப்பான கொரோனா (Corona) இன் மர்மங்கள் குறித்து இச்செய்மதி ஆராயவுள்ளது. இதற்காக இந்த செய்மதி வெள்ளிக் கிரகத்தைத் தாண்டி 6 பாய்ச்சல்களும் (Flybys) சூரியனுக்கு அருகே செல்லும் வரை மொத்தம் 24 பாய்ச்சல்களையும் மேற்கொள்ளவுள்ளது.

இன்னொரு விண்வெளிச் செய்தி -

Exo planet எனப்படும் விண்ணில் பூமியை ஒத்த கிரகங்களை கண்டு பிடிக்கவென பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப் பட்டுள்ள TESS என்ற செய்மதி சமீபத்தில் பூமியை ஒத்த இரு கோள்களைக் கண்டு பிடித்துள்ளது.

சிறந்த பூமி, சூடான பூமி என அழைக்கப் படும் இவ்விரு கோள்களும் பூமியில் இருந்து 49 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. TESS இற்கு முன்பு செலுத்தப் பட்ட கெப்ளர் விண் தொலைக்காட்டி கடந்த 20 வருடங்களாக பூமியை ஒத்த சுமார் 3700 Exo planets களை கண்டு பிடித்திருந்தது. விரைவில் சக்தி தீர்ந்து போகவுள்ளதால் கெப்ளர் செய்மதியின் இயக்கம் நின்று விடப் போகின்றது என கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது.