கட்டுரைகள்

ஐரோப்பிய பெற்றோருக்கு தத்துக் கொடுக்கும் நோக்கில், 1980 களில் இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அவர்களது தாய்மாரிடமிருந்து திருடப்பட்டோ, அல்லது கொள்வனவு செய்யப்பட்டோ இருந்தனர். 

இதில் பெரும்பாலானவர்கள், தென்னிலங்கையின் ஏழ்மையான சிங்கள கிராமத்து பெற்றோரிடமிருந்து திருடப்பட்ட குழந்தைகள்.  பெற்றோரின் ஏழ்மையை நிலையை காரணம் காட்டி, குழந்தைகள் சிறுவிலைக்கு வாங்கப்பட்டதாக இருக்கலாம். குழந்தைகள் இறந்துவிட்டனர் எனப் பெற்றோரை ஏமாற்றி தத்து கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது, குழந்தைகளுக்கு எதிர்கால நல்ல வாழ்வு கிடைக்கும். அவர்களை விரைவில் சந்திப்பீர்கள் என மாயை காண்பிக்கப்பட்டிருக்கலாம். அனைத்தும், வெறும் 2000 சுவிஸ் பிராங்குகள் பேரத்திற்காக, சில இலங்கையர்கள் இவ்வர்த்தக மாற்றினைச் செய்திருக்கிறார்கள்.

1984ம் ஆண்டு இலங்கையில் போலி வர்த்தகர்கள் மூலம், சட்டவிரோதமான ஆவணங்கள் கையாளப்பட்டு இக்குழந்தைகள் சுவிற்சர்லாந்துக்கு விற்கப்படுவதாக சுவிஸ் அரசுக்கு பல சமூக ஆர்வளர்கள் தெரியப்படுத்தியிருந்த போதும், சுவிஸ் அரசு பாராமுகமாக இருந்துள்ளது.

இவர்களில் சுமார் 750 பச்சிளம் குழந்தைகள் சுவிற்சர்லாந்துப் பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலானவருக்கு போலியான பிறப்புச் சான்றிதழ்கள், போலியான தத்துக் கொடுப்புச் சான்றிதழ்களை பயன்படுத்தி இக்குழந்தைகள் கைமாறப்பட்டிருந்தது, அந்நாட்களில் பெரும் ஊடக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இக்குழந்தைகள் இன்று பெரியவர்களாகி, அவர்களது பூர்வீகம், மற்றும் நிஜத் தாய்மார்களை இலங்கையில் தேடித் தேடிக் களைத்து விடுகின்றனர்.

ஆனால் இச்சர்ச்சை தொடர்பில் இன்று வரை சுவிற்சர்லாந்து அரசு சட்டரீதியான எந்நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் நேற்று சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சி சேவையான RTS இல்  வெளியான ஆவணக் காணொளி இது. பிரெஞ்சு மொழி தெரிந்தவர்கள் நிச்சயம் முழுமையாக இக்காணொளியின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

காணொளியை பார்ப்பதற்கான இணைப்பு!

- ஸாரா