கட்டுரைகள்

ஜூலை 20 இல் பதிவிடப் பட்ட நட்சத்திரப் பயணங்கள் தொடரின் 43 ஆவது பாகத்தில் பூமியில் இருந்து நோக்கும் போது விண்மீன் தொகுதிகள் அமைவிடம், ஜோதிடத்தின் நம்பகத் தன்மை மற்றும் precession எனும் பூமியின் கோண இயக்கம் என்பவை தொடர்பில் பார்த்திருந்தோம்.

இனி வரும் தொடர்களில் பூமியின் அச்சு அதன் சுழற்சியால் நட்சத்திரங்களின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றம், பருவ நிலை மாற்றம் மற்றும் விண்ணில் தென்படும் பொருட்களுக்கு இடையேயான தூரத்தை அளவிடும் முறை என்பவை தொடர்பில் பார்ப்போம்.

பிரபஞ்சத்தில் பூமி அமைந்துள்ள வான் மண்டல கோளம் (Celestial sphere) எனும் மாதிரியை உபயோகித்து எம்மால் பூமியில் ஏற்படும் பருவ சுழற்சியை விளக்க முடியும். வான் மண்டல பூமத்திய ரேகை (Celestial equator) ஆனது வானில் பூமியின் பூமத்திய ரேகையின் (Earth's equator) விளைவு ஆகும். ஆனால் வானில் சூரியன் பயணிக்கும் பாதை போல் தென்படுவது (ecliptic) ஆனது பூமியின் சுற்று வட்டப் பாதையின் (orbit) விளைவு ஆகும். பூமியின் சுழற்சியோ அதன் சுற்று வட்டப் பாதையுடன் ஒருங்கிணைந்து இருப்பதால் சூரியன் பயணிக்கும் பாதையான ecliptic இற்கும் பூமியின் வான் மண்டல பூமத்திய ரேகைக்கும் இடைப்பட்ட கோணம் எப்போதும் 23.5 பாகையாக சாய்ந்து உள்ளது. இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது கிழக்கே பயணிக்கும் சூரியன் 6 மாதம் பூமியின் தென் அரைக் கோளத்திலும், 6 மாதம் பூமியின் வடவரைக் கோளத்திலும் சஞ்சரிக்கின்றது. இதனால் தான் பருவ காலங்கள் (Seasons) ஏற்படுகின்றன.

குறிப்பாக பூமி அமைந்துள்ள வான் மண்டல கோளத்தில் (Celestial sphere) (பார்க்க படம் 1) அது பயணிக்கும் ஒழுக்கில் உள்ள 4 நிலைகளிலும் 4 விதமான பருவ காலங்கள் ஏற்படுகின்றன. அது தொடர்பான விபரம் வருமாறு:

1.Vernal equinox - March 21 - Spring begins (வசந்த காலத் தொடக்கம்)
2.Summer solstice - June 22 - Summer begins (கோடைக் காலத் தொடக்கம்)
3.Autumnal equinox - September 22 - Autumn begins (இலையுதிர் காலத் தொடக்கம்)
4.Winter solstice - December 22 - Winter begins (குளிர் காலத் தொடக்கம்)

சூரியனானது பூமத்திய ரேகையில் மிகவும் வடக்குப் பாகமாகக் கடக்கையில் Vernal equinox எனும் புள்ளியைத் தொடுகையில் வசந்த காலம் ஏற்படுகின்றது. இதுவே மிகவும் நீண்ட வடக்குப் புள்ளியை சூரியன் கடக்கையில் Summer solstice எனும் புள்ளியை அணுகும் போது கோடைக் காலம் ஏற்படுகின்றது. இதே போன்று சூரியன் தெற்குப் பக்கமாகக் கடக்கையில் autumnal equinox மற்றும் winter solstice என்ற நிலைகளை அடையும் போது முறையே இலையுதிர் காலமும், குளிர் காலமும் ஏற்படுகின்றன.

இதில் equinox என்ற பெயர் 'equal' இலிருந்து பெறப்பட்டதாகும். வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் சரி சமனான பகலும் இரவும் நிகழ்வதால் இப்பெயர் உபயோகிக்கப் பட்டது. Solstice என்றால் Sun மற்றும் Stationary ஆகிய வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டதாகும். vernal எனப்படுவது green அதாவது பச்சை மற்றும் பசுமையைக் குறிக்கு வசந்த காலம் என்பதால் பெறப்பட்டதாகும்.

கோடைக் காலம் நிலவும் போது ஜூன் மாதக் கடைசியில் ஒரு தினத்தில் பூமியின் வடவரைக் கோளத்தில் (Northern hemisphere) சூரியனை நோக்கி அதிகம் சாய்ந்திருக்கும். இதனால் வடவரைக் கோளத்தில் உள்ள வட அமெரிக்காவில் மிகவும் வெப்பமான கால நிலையும் தென்னமெரிக்காவின் குளிரான கால நிலையும் நிலவும். பதிலுக்கு குளிர் காலம் நிலவும் போது டிசம்பர் மாதக் கடைசியில் பூமியின் வடவரைக் கோளம் சூரியனை விலக்கி அதிகம் சாய்ந்திருக்கும். இதனால் வட அமெரிக்காவில் மிகவும் குளிரான கால நிலையும் தென்னமெரிக்காவில் வெப்பமான கால நிலையும் நிலவும்.

பூமி தன்னைத் தானே சுற்றும் அச்சானது எப்போதும் துருவ நட்சத்திரமான போலாரிஸ் இனை நோக்கியே உள்ளது. மேலும் உச்சியைப் போலவே சுற்றும் பூமியானது சூரியனைச் சுற்றி வரும் போதும் கூடத் தனது அச்சை நிலையானதாகவே முன் நிறுத்தி வருகின்றது. இதனால் சூரியனுடனான ஒழுக்கில் ஒரு பக்கம் பூமியின் வடவரைக் கோளம் அதிகமாக நோக்கிய படியும், மறுபக்கம் பூமியின் வடவரைக் கோளம் விலகிய படியும் பூமி செல்கின்றது. ஆனாலும் பூமி தன்னைத் தானே சுற்றும் அச்சின் திசை ஒரு போதும் மாறுவதில்லை.

இதை கீழே உள்ள டார்ச் லைட் படத்தில் விளங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக குளிர் காலத்தில் கோடைக் காலத்தை விட சூரிய ஒளியின் படர்க்கை மிகப் பெரிய பரப்புக்கு விரிவாக்கப் பட்டு பூமியின் தரையில் வீழ்வதால் பூமியின் வெப்பம் குறைவடைந்து நாம் குளிர்ச்சியை அனுபவிக்கின்றோம். மேலும் கோடைக் காலத்தில் சூரியன் சற்று வடகிழக்கே உதித்து வடமேற்கே மறைவதால் பகல் பொழுதின் அளவு 12 மணித்தியாலத்தை விட அதிகமாகவும் குளிர் காலத்தில் சூரியன் சற்று தென்கிழக்கே உதித்து தென்மேற்கே மறைவதால் பகல் பொழுதின் அளவு 12 மணித்தியாலத்தை விடக் குறைவாகவும் இருப்பதும் நாம் அறிந்திருக்கும் ஒன்றே ஆகும். ஆனால் இது பூமியின் வடவரைக் கோளத்தில் உள்ள நாடுகளில் திருத்தமாக இருப்பதும் நாம் அவதானிக்கத் தக்கதே.

பூமி சூரியனை சுற்றி வரும் ஒழுக்கானது ஓரளவு தான் நீள் வட்டப் பாதையாகும். இதனால் ஜனவரி 4 ஆம் திகதி பூமி ஆனது Perihelion அதாவது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புள்ளிக்கு பூமி வருகின்றது. ஆனால் இது சராசரியை விட 1.7% வீதம் தான் அருகாமை ஆகும். ஆனால் ஜூலை 4 ஆம் திகதி பூமி aphelion அதாவது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவில் உள்ள புள்ளிக்கு பூமி வருகின்றது. இதுவும் கிட்டத்தட்ட 1.7% வீதம் தான் சராசரியாகத் தொலைவு ஆகும். இந்த சிறிய வேறுபாடு பூமியில் பருவ மாற்றங்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணித்தியாலங்களால் ஆன எமது நேரம் பூமி தன்னை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் என்றும் பூமி சுழல்வதால் இரவு பகல் ஏற்படுகின்றது என்பதையும் நாம் அறிந்திருப்போம். மேலதிகமாக பூமி ஒரு நீள்வட்ட ஒழுக்கில் சூரியனைச் சுற்றி வருவதாலும் தனது அச்சில் 23 1/2 பாகை சாய்ந்திருப்பதாலும் பருவ காலங்கள் சுழற்சி அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதையும் இப்போது பார்த்தோம். எமது பூமி தோற்றமடைந்து 4.6 பில்லியன் வருடங்கள் ஆகி விட்டன.

இன்று அறிவியல் துணை கொண்டு பிரபஞ்சத்தை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் அணுக் கடிகாரத்தைக் கொண்டே நேரத்தை மிகத் துல்லியமாக அளவிடுகின்றார்கள். மேலும் தூரத்தை விடவும் ஏனைய அலகுகளை விடவும் நேரத்தையே மிகத் திருத்தமாக அளவிட முடியும் என்றும் இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாதாரணமாக நாம் கைக் கடிகாரங்களில் பயன்படுத்தும் நேரம் mean solar time அதாவது சூரியன் உதித்து, மறைந்து மறுபடி உதிக்க எடுக்கும் நேரத்தை அல்லது பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர எடுக்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட பொறிமுறையில் இயங்குகின்றது.

உண்மையில் பூமி சூரியனைச் சுற்றி வர சராசரியாக 365 நாட்களும் தன்னைத் தானே ஒருமுறை சுற்ற மிகத் திருத்தமாக 23 மணித்தியாலமும் 56 நிமிடமும் 4 செக்கன்களும் தான் நட்சத்திரங்கள் சார்பாக எடுக்கின்றது. இதனை Sidereal day என ஆங்கிலத்தில் அழைப்பர். 24 மணித்தியாலத்தை விட 3 நிமிடமும் 56 நிமிடங்களும் குறைந்த இந்த அளவும் கூட 1/365 இல் ஒரு பகுதி நாளாகும். இந்த வித்தியாசம் எதேச்சையாக ஒரு வருடத்தில் எடுக்கும் நாட்களுக்கும் சமனாகவில்லை. ஏன் இந்த ஒற்றுமை ஏற்படுகின்றது என்றால் குறித்த ஒரு தினத்தில் மிகத் திருத்தமாக தனது நீள்வட்டப் பாதையின் 1/365 பங்கையே கடக்கின்றது என்பதால் ஆகும்.

பூமி ஒரு தடவை சூரியனைச் சுற்றி வர 365 1/4 நாட்கள் எடுக்கின்றன. ஆனால் ஒரு சாதாரண கேலண்டரில் வெறும் 365 நாட்கள் தான் இருக்கும். இதனால் தால் 4 வருடங்களுக்கு ஒரு முறை பெப்ரவரி மாதம் 29 நாட்களாக அமைக்கப் பட்டு வருவதுடன் அந்த வருடம் லீப் வருடம் என்றும் அழைக்கப் படுகின்றது. அடுத்த தொடரில் சந்திரனுடைய சுழற்சி மற்றும் நிலவின் தோற்றத்தின் மாறுபாடுகள் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்...

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 40 (பிரபஞ்சத்தின் கூறுகளின் பருமன் ஒப்பீடு)

நட்சத்திரப் பயணங்கள் 41 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம்)

நட்சத்திரப் பயணங்கள் 42 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 2)

நட்சத்திரப் பயணங்கள் 43 (நம் கண்ணுக்குத் தெரியும் வானம் 3)

 

- 4 தமிழ்மீடியாவுக்காக: நவன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.