கட்டுரைகள்
Typography

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச நாடுகளின் மிக முக்கிய விண்கலமான சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்துடன் ISS தற்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இணைக்கப் பட்டுள்ளது.

இதில் காணப் படும் சிறிய துளை காரணமாக இதனைக் கடந்த 4 மாதங்களாகப் பயன்படுத்தாது வைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விண்கலத்துக்கு வெளியே 6 மணித்தியாலம் நடந்து சோயுஸ் எம் எஸ் - 9 விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அமெரிக்க ரஷ்ய விண்வெளி வீரர்கள் அடைக்கவுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் குறித்த சோயுஸ் ஓடத்தில் சிறிய பென்சில் அளவில் துளை இருப்பது அழுத்த மாறுபாட்டை அடுத்து கண்டு பிடிக்கப் பட்டது. இதனை அடைக்கும் பணியை செவ்வாய் இரவு அமெரிக்க நேரப்படி 9.30 மணிக்கு விண்வெளி வீரர்கள் ஆரம்பிக்கவுள்ளனர். இந்த துளை அடைக்கப் பட்டால் தான் குறித்த சோயுஸ் எம் எஸ் - 9 ஓடம் மூலம் எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி நாசா விண்வெளி வீரர் புரோகோப்யோவ் என்பவர் பூமிக்கு வரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்தத் துளை தற்செயலாக ஏற்பட்டது அல்ல என்றும் இதனை வேண்டுமென்றே யாரும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையை குறித்த ஓடம் பூமிக்கு வந்த பின் நாசா நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்