கட்டுரைகள்

நிலவில் பூமியின் கண்ணுக்குத் தெரியாத அதன் இருண்ட பக்கத்தில் தனது சாங் இ-4 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கிச் சாதனை படைத்துள்ளது சீனா.

இதன் மூலம் நிலவின் இருண்ட அல்லது அதன் முதுகுப் பக்கத்தில் தரை இறங்கிய முதல் விண்கலம் என்ற வரலாற்றுச் சாதனையையும் சீனா பெற்றுள்ளது.

பொதுவாக பூமியும், நிலவும் ஒரே போன்று தன்னைத் தானே சுற்றுவதால் நிலவின் மறுபக்கத்தில் சூரிய வெளிச்சம் பட்டால் கூட பூமியில் இருந்து பார்க்கும் போது அதன் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். இதனால் நிலவின் பின்பகுதியை இருண்ட பகுதி என்பதை விட முதுகுப் பகுதி என்பது தான் சாலப் பொருந்தும். இதற்கு முன் இந்த முதுகுப் பகுதியை நாசாவின் செயற்கைக் கோள் படம் மாத்திரம் பிடித்துள்ளது. 2018 டிசம்பர் 8 ஆம் திகதி மார்ச் பி ரக ராக்கெட்டு மூலம் நிலவின் பின் பகுதிக்கு இந்த சாங் இ-4 விண்கலம் ஏவப் பட்டது. டிசம்பர் 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சாங் இ-4 விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை நிலவில் தரை இறங்கியுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஜட்கென் படுக்கையில் கிறீன்விச் நேரம் மதியம் 2.26 மணிக்கு சாங் இ-4 தரையிறங்கியது. தரை இறங்கிய சாங் இ-4 ரோவர் வண்டி உடனே எடுத்த புகைப் படங்கள் நிலவைச் சுற்றி வரும் அதன் செய்மதியால் பெறப்பட்டு பூமியை வந்தடைந்துள்ளது. சாங் இ-4 விண்கலம் நிலவில் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதத்தில் சுமார் 28 சீனப் பல்கலைக் கழகங்கள் இணைந்து வடிவமைத்த லூனார் மினி பயோஸ்பியர் என்ற உபகரணம் இதில் பொருத்தப் பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.