கட்டுரைகள்

வருங்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்கி விண்வெளி ஆய்வை முன்னெடுக்கும் வகையில் அங்கு குடியிருப்பு அமைக்க அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயற்படவுள்ளன.

அதாவது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், சீன தேசிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

ஜனவரி தொடக்கத்தில் சந்திரனின் மறுபக்கத்துக்கு முதன் முறையாக சீன விண்கலமான சாங்-இ4 வெற்றிகரமாகச் சென்று அதன் தரையில் ரோவர் வண்டியை இறக்கியது. மேலும் நிலவில் முதலாவது பருத்தி விதையும் வளர்க்கப் பட்டது. சீனாவின் இந்தச் செயற்பாடுகளை அடுத்து நிலவில் குடியிருப்பு அமைப்பது தொடர்பில் சீனத் தேசிய விண்வெளி ஆய்வு மையத்துடன் நாசா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் முதற் கட்டமாக 2020 தொடக்கத்தில் நிலவுக்கு நாசா தானியங்கி ரோபோவை அனுப்பவுள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியிருந்த சந்திராயன் 1 விண்கலம் கண்டு பிடித்ததை அடுத்து அங்கு காலனி அமைப்பதற்கான திட்டம் சூடு பிடித்தது. ஆனால் இதற்குப் பிரதான தடையாக நிலவில் சுமார் 354 மணித்தியாலம் கிட்டத்தட்ட 2 கிழமைகள் இரவு நீடிக்கும் என்பதால் சூரிய வெளிச்சம் மூலம் தொடர்ச்சியாக மின்னை உற்பத்தி செய்வதில் சிக்கல் உள்ளது. 1959 ஆமாண்டு செப்டம்பர் 13 ஆம் திகதி நிலவுக்கு முதலாவது விண்கலமான Luna 2 சென்று அதன் தரையில் மோதியது. நிலவின் சுற்று வட்டத்தில் இணைந்த முதலாவது விண்கலம் Luna 10 ஆகும்.

1969 ஆமாண்டு ஜூலை மாதம் அப்போலோ 11 விண்கலத்தில் சென்று நிலவில் முதல் மனிதனாக நீல் ஆம்ஸ்ட்ரோங் கால் பதித்தார். இதையடுத்து கிட்டத்தட்ட 9 மனிதனைக் காவிச் சென்ற அப்போலோ செயற்திட்டங்களிலும் வெற்றிகரமாக அவர்கள் நிலவுக்குச் சென்று பூமிக்குத் திரும்பினர். இதன் போது பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு நிலவில் இருந்து மண் மாதிரிகளும் கொண்டு வரப் பட்டன.

நிலவை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்கலங்கள் இதுவரை ஆய்வு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் அஜித் ஆண்டி ஹிரோவாக நடித்து வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் மங்காத்தா.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.