கட்டுரைகள்

2017 ஆமாண்டு ஆக்டோபர் 19 ஆம் திகதி பூமியில் இருந்து 33 000 000 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை விட்டு விலகிச் செல்லும் வண்ணம் கடந்த ஒமுவாமுவா என்ற விண்கல் அதன் பயணப் பாதை மற்றும் வேறு சில அம்சங்கள் காரணமாக நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஷுமேல் பெய்லி தலைமையிலான விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா அல்லது வேறு எதுவுமா என விஞ்ஞானிகள் குழம்பியிருந்த பட்சத்தில் அதில் இருந்து வந்த சில சிக்னல்கள் மற்றும் எந்தவொரு கிரகம் அல்லது நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காது மிக நேர்த்தியாக அது கடந்து சென்ற விதம் என்பவை ஒமுவாமுவா நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என்ற சந்தேகத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.

தற்போது 650 கோடி ரூபாய் செலவில் ரஷ்யத் தொழில் அதிபர் ஒருவர் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இந்த ஒமுவாமுவா விண்பொருள் நிச்சயம் ஒரு ஏலியன் கப்பலாகவே இருந்தால் அது ஏன் பூமிக்கு அருகே வந்து சென்றது என்பதை விரைவில் அறிவது மிக அவசியம் எனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2017 இல் இந்த விண்பொருள் தென்பட்ட போது நாசா இது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்த பொருள் தான் என உறுதிப் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக சூரிய குடும்பத்தில் உள்ள விண்கற்கள் அல்லது வால்வெள்ளிகளின் பதார்த்தங்களின் தன்மை இந்த ஒமுவாமுவாவில் தென்படாததும் கூறப்படுகின்றது.

மேலும் இது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்