கட்டுரைகள்

நாம் அன்றாடம் அருந்தும் கோப்பி பானத்தில் அடங்கியுள்ள கஃபேன் என்ற வேதிப் பொருளைக் கண்டு பிடித்த ஜேர்மனி நாட்டு வேதியியலாளரான ஃபிரெட்லியெப் ஃபெர்டினண்ட் ருங்கே என்பவரது 225 ஆவது பிறந்த தினம் இன்று வெள்ளிக்கிழம அனுட்டிக்கப் படுகின்றது.

இவரைச் சிறப்பிக்கும் வண்ணம் இன்று கூகுளின் முகப்பில் கூகுள் டூடுளாக விசேட லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த கஃபேன் என்ற பதார்த்தம் உடல் எடையைக் குறைப்பதில் இருந்து மூளையின் செயற்திறனை அதிகரிப்பது வரை பல்வேறு நண்மைகளை வழங்குகின்றது.

ஒரு நாளைக்கு 3 முறை கஃபே பானம் அருந்துபவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களோ அல்லது பக்கவாதமோ தாக்குவது ஏனையவர்களை விட 18% வீதம் குறைவு என்பது ஆய்வில் கண்டறியப் பட்ட உண்மையாகும். இந்த கஃபேன் வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைய வைக்கும் ஆற்றல் உள்ளதால் தமது உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இது மிகவும் உதவக் கூடியது ஆகும்.

இதுதவிர ஞாபக மறதி நோயான அல் ஷைமர் தாக்கும் வீதத்தையும் கஃபேன் கட்டுப் படுத்தக் கூடியது என்றும் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இவை அனைத்தையும் விட முக்கியமாகத் தினசரி கஃபே அருந்துபவர்களுக்கு தோல் புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற கேன்சர் சம்பந்தமான வியாதிகளும் ஏனையவர்களை விடக் குறிப்பிடத்தக்களவு கட்டுப் படுத்தப் படுகின்றது என்பதும் நோக்கத்தக்கது.