கட்டுரைகள்

மனிதன் மட்டுமன்றி இப்பூமியில் எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாத தேவை தண்ணீர் ஆகும். இன்று மனித இனத்துக்கு உலகளாவிய ரிதியில் அருகி வரும் குடிநீர் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதனால் தூய்மையான நீரை இயன்ற வரை சேமிக்கக் கடமைப் பட்டுள்ள எமக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இன்று மார்ச் 22 ஆம் திகதி உலகத் தண்ணீர் தினமாக .நா இனால் பிரகடனப் படுத்தப் பட்டு கொண்டாடப் படுகின்றது. இந்நிலையில் தண்ணீர் குறித்த முக்கிய புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

1. உலகில் 2.1 பில்லியன் மக்கள் தமது வீட்டில் சுகாதாரமற்ற தண்ணீரை குடிநீராகவும் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

2. சுத்தமற்ற, தூய்மைப் படுத்தப் படாத தண்ணீரை அருந்துவதாலும், மோசமான கழிவகற்றல் பொறிமுறையாலும் உலகம் முழுதும் 5 வயதிலும் குறைந்த 700 குழந்தைகள் தின்சரி வயிற்றுப் போக்கு காரணமாக மரணிக்கின்றனர்.

3.உலகளாவிய ரீதியில் கிராமப் புறங்களில் வாழும் 80% வீதத்துக்கும் அதிகமான மக்கள் பல தேவைகளுக்கு அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர்.

4.உலக சனத்தொகையில் 2/3 பங்கினர் அதாவது 4 பில்லியன் மக்கள் வருடத்தில் ஒரு மாதமாவது அதிக பட்ச தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குகின்றனர்.

5.மிக தீவிரமான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக 2030 அளவில் 700 மில்லியன் மக்கள் இடம் பெயர்வார்கள் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

6.இவ்வாறு இடம் பெயர்பவர்களில் 68.5 மில்லியன் மக்கள் தூய தண்ணீரைப் பாவிப்பது என்பது மிக மிகக் கடுமையான ஒன்றாக இருக்கும்.

7. பூமியில் 70 வீதம் கடலால் தான் சூழப் பட்டுள்ளது என்ற போதும் இதில் தூய்மையான தண்ணீர் வெறும் 2.5% வீதம் தான். அதிலும் மனித இனத்துக்கு இலகுவாகக் கிடைக்கக் கூடிய தூய்மையான தண்ணீர் 1% வீதம் தான்.

பூமியில் மிக அதிகளவான தூய நீர் துருவங்களிலும் மலைத் தொடர்களிலும் பனியாக உறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.