கட்டுரைகள்

செவ்வாய்க் கிரகத்தில் அதன் புவியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.

செவ்வாயின் மத்திய ரேகைக்கு அருகே அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரை இறங்கிய இவ்விண்கலம் வெற்றிகரமாகத் தன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விண்கலம் செவ்வாயின் தரை மேற்பரப்பில் SEIS என்ற நிலநடுக்கமானியை ஒன்றை செலுத்தி அதன் உட்புறத்தின் துல்லியமான முப்பரிமாண மாதிரியை பெறக் கூடியதாகும். இதன் மூலம் உட்புற வெப்பநிலையை அளவிட்டு செவ்வாய்க்கிரகத்தின் தொடக்க கால நிலவியல் தன்மையை ஆராயக் கூடியதாகும்.

இந்த விண்கலம் செவ்வாயில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஒன்றை அளவிட்டு புகைப் படமும் எடுத்து நாசாவின் JPL என்ற ஆய்வு கூடத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளது. ஏப்பிரல் 6 ஆம் திகதி இந்த நிலநடுக்கம் உணரப் பட்டுள்ளது. இன்னும் ஒரு தசாப்த காலத்துக்குள் நிலவுக்கு மறுபடியும், செவ்வாய்க் கிரகத்துக்கு முதன் முறையாகவும் மனிதரை அனுப்புவது தொடர்பில் நாசா தீவிர கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.