கட்டுரைகள்

இந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமி தோன்றும் போது அதன் வயது 9 பில்லியன் வருடங்கள் எனப்படுகின்றது.

ஆனாலும் ஒரு வியக்க வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியைச் சுற்றி வரும் ஹபிள் தொலைக் காட்டி மூலம் இன்றும் பூமியில் இருந்து 12 பில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில் உள்ள அவதானிக்கத் தக்க பிரபஞ்சத்தின் அல்ட்ரா டீஃப் ஃபீல்டு எனப் படும் படங்களைக் கூடப் பெற முடிகின்றது என்பதாகும்.

இது எவ்வாறு சாத்தியமாகும்? இதற்குக் காரணம் பிரபஞ்சம் தோன்றியதில் இருந்து இன்றைய திகதி வரை அது ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் விரிவடைகின்றதா? இதன்போது மாத்திரம் தான் நாம் எமது பூமி தோன்ற பல பில்லியன் ஒளியாண்டுகளுக்கு முன்பு புறப்பட்ட ஒளியைக் காண முடியும் என்பது ஓரளவு வாதத்துக்குரிய கண்ணோட்டமாகும்.

ஆனால் இதற்கு ஓரளவு லாஜிக்கலான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. உதாரணத்துக்கு மிகவும் மெதுவாக செயற்படும் அஞ்சல் அலுவலகம் உள்ள கிராமம் ஒன்றில் நீங்கள் வசிப்பதாக வைத்துக் கொள்வோம். அங்கு நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டத் திட்டமிடுகின்றீர்கள். ஒரு மாதத்துக்குள் வீடு கட்டப் பட்டு அங்கு நீங்கள் உட்புகுந்தும் விட்டீர்கள்! அங்கு இன்னும் 2 மாதங்களுக்கும் வசித்து விட்டீர்கள். அதாவது கிட்டத்தட்ட 3 மாதங்கள் இந்த வீட்டில் செலவிடுகின்றீர்கள். பின்பு ஒரு கடிதம் உங்களுக்குக் கிடைக்கின்றது. அதில் உள்ள குறிப்பின் படி அந்தக் கடிதம் ஒரு வருடத்துக்கு முன்பே வரையப் பட்டதை நீங்கள் அறிகின்றீர்கள். எனவே உங்களுக்கு எழும் கேள்வி இவ்வாறு அமைகின்றது.

கிட்டத்தட்ட 3 மாதமே ஆகியுள்ள இந்த புது வீட்டுக்கு ஒரு வருடத்துக்கு முன்பே வரையப் பட்ட இக்கடிதம் வருவது எவ்வாறு சாத்தியம் ஆகின்றது? நினைவில் கொள்ளுங்கள், உங்கள் அஞ்சல் அலுவலகம் மிக மெதுவாக செயற்பட்டாலும் இதற்கான ஒரே விடை இக்கடிதம் வரையப் பட்ட வீடு உங்கள் புது வீடு கட்டப் பட்ட இடத்தில் இருந்த வீட்டுக்கு இணையாக வெகு காலத்துக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பது தான். இதே போன்ற நிகழ்வு தான் ஹபிள் தொலைக் காட்டியின் அவதானம் மூலம் எமக்கு அனுபவப் பட்டுள்ளது.

எமது பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் வருடங்கள் என்று கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.