கட்டுரைகள்

எமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.

ஆனால் அதை விட பல ஆயிரம் மற்றும் மில்லியன் கணக்கான ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களைப் பார்க்க முடிகின்றது இது ஏன்?

இதற்குக் காரணம் நமது சூரிய குடும்பம் பால் வெளி அண்டத்தில் அமைந்துள்ள இருப்பிடமும் புரோக்ஸிமா செண்டூரி சிவப்புக் குள்ளன் (Red Dwarf) என்ற பிரகாசம் குறைந்த நட்சத்திரம் என்பதாலும் ஆகும். அதாவது எமது சூரிய குடும்பம் பால் வெளி அண்டத்தின் விளிம்பிலும் புரோக்ஸிமா செண்டூரி அதை விட பால் வெளி அண்டத்தின் மையத்திலும் அமைந்துள்ளன. இந்த புரோக்ஸிமா செண்டூரி சூரியனை விட மிகவும் சிறிய கிட்டத்தட்ட வியாழக் கிரகத்துக்கு ஒப்பான அளவே இருப்பதால் அதன் பிரகாசமும் மிகக் குறைவாகும்.

இதே விண்மீன் தொகுதியிலுள்ள ஆல்ஃபா செண்டூரி மற்றும் பீட்டா செண்டூரி ஆகிய நட்சத்திரங்கள் நீல மாற்றும் வெள்ளை நிற நட்சத்திரங்கள் ஆகும். மேலே உள்ள படத்தில் சனிக்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய கஸ்ஸினி என்ற விண்கலம் எடுத்த புகைப் படமாகும். இதில் சனியின் வளையங்களை ஒட்டி மிகச் சிறிய புள்ளியாகக் காணப்படும் ஆல்ஃபா செண்டூரி என்ற நட்சத்திரம் உண்மையில் சூரியனின் அளவை ஒத்ததாகும்.

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்