கட்டுரைகள்
Typography

அண்மையில் செய்மதி மூலம் படம் பிடிக்கப் பட்ட HD140283 என்ற நட்சத்திரம் அல்லது மெத்துசெலா நட்சத்திரம் என செல்லமாக அழைக்கப் படும் விண்மீன் ஆனது உண்மையில் எமது பிரபஞ்சத்தை விட வயதானதா?

இது குறித்து விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்று பார்ப்போம். உண்மையில் இந்த விண்மீன் எமது பிரபஞ்சத்தை விட வயதானது என்பதை விட இதன் வயதை உறுதியாக அறிய முடியாததால் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது என இதற்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

எமது அண்டங்களின் பரிணாமத்தை அடிப்படையாகக் கொண்டு எமது பிரபஞ்சத்தின் வயது 13.66 தொடக்கம் 15.25 பில்லியன் வயதுக்குள் தான் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பகுதிக்குள் தான் குறித்த HD140283 என்ற நட்சத்திரத்தின் வயது வருகின்றது. இதனால் நிச்சயம் இது இனம் காணப் பட்ட நட்சத்திரங்களில் மிகவும் வயது கூடியது என்பது இலகுவாகப் புரியக் கூடியதே. அதாவது இந்த நட்சத்திரத்தின் வயது 13.79 தொடக்கம் + அல்லது - 0.021 பில்லியன் வருடங்களுக்குள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த கணிப்பீடு பிரபஞ்சத்தின் வயதுக் கணிப்பீட்டுக்கு உள்ளே வருவது குறிப்பிடத்தக்கது. இதைத் தவறாகப் புரிந்து கொண்டு எமது பிரபஞ்சத்தில் அதனை விட வயது கூடிய நட்சத்திரங்கள் உள்ளன என்று செய்திகள் வெளியாகுவது எந்த வீதத்திலும் விஞ்ஞான ரீதியான ஆதாரமற்றவை என்பதை விளங்கிக் கொள்வது மிக அவசியமாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS