கட்டுரைகள்

இது சற்று இரசாயனவியல் அல்லது வேதியியல் தொடர்பான விடயம். வேதியியலில் உள்ள மூலகங்களின் ஆவர்த்தன அட்டவணையில் 1 தொடக்கம் 92 வரையிலான அனைத்து மூலகங்களும் இயற்கையில் உள்ளன.

இதில் 43 ஆவது மற்றும் 61 ஆவது மூலகங்களுக்கு மாத்திரம் விதிவிலக்கு உள்ளது. இந்த இயற்கையாக இல்லாத மூலகங்களிலுமே சில மிகவும் குறைவான அளவிலும், இன்னும் சில ஏனைய ஐசோடோப்புக்களுடன் சேர்ந்தும் உள்ளன.

இவ்வாறு ஐசோடோப்புக்களுடன் சேர்ந்து காணப்படும் மூலகங்கள் யாவும் ஆய்வு கூடத்தில் பிரித்துத் தான் எடுக்க முடியும். அணு எண் (அல்லது ஆவர்த்தன அட்டவணையில் உள்ள நிலை) 99 இற்கு மேற்பட்ட எந்தவொரு மூலகங்களுமே மிக மிகக் குறைந்த வாழ்க்கைக் காலம் கொண்டவை என்பதால் இயற்கையில் இவை மிகவும் சொற்பமாகவே உள்ளன. விஞஞான ஆய்வுகளுக்கு மாத்திரமே இவை பயன்படுத்தப் படுகின்றன.

இதில் சற்று அதிக ஆயுள் கொண்ட புளூட்டோனியத்தின் அரைவாசி ஆய்வுக் காலம் அல்லது கதிர்வீச்சுக் காலம் 88 வருடங்களாகும். ஆனால் 2003 ஆமாண்டு ரஷ்ய, ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழுவொன்றினால் உருவாக்கப் பட்ட ஹைட்ரஜன்-7 (Hydrogen-7) என்ற மூலகம் தான் உலகில் மிகக் குறுகிய ஆயுள் கொண்ட மூலகம் ஆகும். சுமார் 23 yoctoseconds ஆயுள் மாத்திரம் கொண்ட இந்த மூலகத்தின் ஆயுளானது ஒரு செக்கனின் septillionth இல் ஒரு பகுதி காலம் மாத்திரமே நிலைத்து நிற்கக் கூடியது. அதாவது ஒரு செக்கனின் 0.00000000000000000000001 பகுதி காலம் மாத்திரமே கதிர்வீச்சுக் கொண்ட இந்த மூலகம் தான் ஆய்வு கூடத்தில் கண்டு பிடிக்கப் பட்ட மிகக் குறுகிய ஆயுள் கொண்ட மிக அரிதான மூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேயொரு புரோட்டோனும், 6 நியூட்ரோன்களும் உடைய இந்த ஹைட்ரஜன் - 7 மூலகத்தின் உருவப் படம் என எதுவும் கிடையாது என்ற போதும் கணணியால் வடிவமைக்கப் பட்ட அதன் கட்டமைப்பு வெளியிடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.