கட்டுரைகள்

நிச்சயம் எமது பகுத்தறிவால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் இவ்வாறு சரியாகவோ தவறாகவோ கருதப் படுவதற்கான நியாயமான புரிந்துணர்வுகளைப் பார்ப்போம்.

உண்மையில் பிரபஞ்சவியலில் ஆரம்ப ஒருமை நிலை (Initial Singularity) எனப்படுவது ஏதுமற்ற ஒன்றல்ல. பதிலாக அனைத்தும் ஒன்றாக இருந்த நிலை.

அதாவது இன்று எம்மால் பார்க்கக் கூடிய எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பாகங்களும் ஒன்றாக ஒரே இடத்தில் 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை ஆகும். ஆனால் இந்த நிலை ஏதுமற்ற நிலை தான் என்று ஏன் கருதப் படுகின்றது. அதாவது இவ்வாறான ஒரு ஒருமை நிலையில் நிலவக் கூடிய வெப்ப நிலை மற்றும் அடர்த்தியின் போது அங்கு சடப்பொருள் நிச்சயம் எந்த வடிவிலும் இருக்க முடியாது ஆகும். இன்னும் தெளிவாக சொல்லப் போனால் அந்த ஒருமை நிலையில் எந்தவொரு பொருளுக்கும் இடையே அளக்கக் கூடிய அளவுகோலை நிர்ணையிக்க எந்தவொரு கூறுமோ அல்லது காலமுமோ இருக்காது.

இன்னும் சொல்லப் போனால் காலம் மாத்திரம் அல்ல 3 பரிமாணங்களிலான வெளி கூட அங்கில்லை. இது நிச்சயம் மேஜிக் போன்று அனைத்தையும் ஏதுமற்ற ஒன்றாக ஆக்கிவிடவில்லை. அந்த ஒருமை நிலையில் கூட திணிவு, அடர்த்தி, அழுத்தம், வெப்பநிலை என்பன இருக்கக் கூடும். ஆனால் அவை முடிவிலி அளவு கொண்டதாக இருக்கும். அவற்றை நிரூபிக்க பரிமாணங்கள் கிடையாது. அதனால் தான் இது பிரபஞ்சத்தில் இருந்த அனைத்தும் வெற்றிடத்தில் இருந்து வந்தவை என்ற தவறான புரிந்துணர்வுக்கு எம்மை இட்டுச் செல்கின்றது என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று.

இது தவிர கணித ரீதியாக அனைத்தும் என்பதற்கும் ஏதுமற்ற என்பதற்கும் ஆன தொடர்பினை கீழே உள்ள சமன்பாடு மூலமாகப் புரிந்து கொள்ள முடியும்.

0 = x + -x

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்