கட்டுரைகள்

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

இதனால் தான் அது மிகவும் குளிராகவுள்ளது என்று கணிக்கப் பட்டுள்ளது. அதாவது சூடான நீரில் இருந்து எவ்வாறு நீராவி வெளியேறி நேரம் செல்ல செல்ல அது குளிர்வடைகின்றதோ அதே போன்று பிரபஞ்சமும் விரிவடையும் போது தொடர்ந்து குளிர்ச்சியடைந்தே வருகின்றது.

ஆனால் கொதி நீர் குளிர்வடைவதற்கும், பிரபஞ்சம் குளிர்வடைவதற்குமான அடிப்படை கட்டமைப்பு வித்தியாசமானது ஆகும். ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழுதும் சீரான வெப்பத்தில் இருந்த போதும் தற்போது அது பூச்சியத்துக்கும் 3 டிகிரி கீழே சராசரி வெப்பத்தில் உள்ளது. பூமியில் வசிக்கும் நாம் சூரியனில் இருந்து வெப்பத்தைப் பெறும் போதும் பெருமளவிலான வெப்பத்தை எமது உடல் காற்று வெளிக்கு கதிர்வீச்சு மூலம் கடத்தி விடுகின்றது. பதிலாக நாம் எந்த ஒரு கதிர்வீச்சையும் பெற்றுக் கொள்வதில்லை.

இதே போன்று தான் எம் பூமியும் வெப்ப சமநிலையைப் பேணுகின்றது. பூமியை வந்தடையும் எந்தவொரு சூரியக் கதிர் வழியிலான வெப்பமும் சற்று நேரத்தில் காற்று வெளியிலும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பாலும் கடத்தப் பட்டு விடுகின்றது. இல்லா விட்டால் சற்று நேரத்துக்குள் நாம் இந்த மிகையான வெப்பத்தில் எரிந்து விடுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இதே விதத்தில் தான் பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களில் இருக்கும் கடும் வெப்பத்தை உமிழும் நட்சத்திரங்களில் இருந்து அந்த வெப்பமும் அண்டங்களுக்கு இடைப்பட்ட வெளியில் கடத்தப் பட்டு வெப்ப சமநிலை பேணப் படுகின்றது. இந்த நட்சத்திரங்களின் திணிவு மற்றும் கொள்வனவை விட அண்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு வெளி இருப்பதால் பிரபஞ்சம் சராசரியாக மிகவும் குளிராகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசாக தமிழ்த் திரையுலகில் தனக்கென்று தனி ராஜ்ஜியம் நடித்தி வருபவர் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையின் இசை வாழ்க்கையை ‘ராஜா தி ஜர்னி’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும், அதைத் தாமே இயக்க விரும்புவதாகவும் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் தனுஷை நடிக்க வைக்க எண்ணியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

ரியாட்டி தொலைக்காட்சிகளின் வரிசையில் பிராந்திய மொழிகளிலும் கலக்கி வரும் டிஸ்கவரி சேனல், காட்சி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘இன் டூ த வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி முடித்து, தேய்ந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வந்தார்கள்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.