கட்டுரைகள்
Typography

முதலில் பிக்பேங் என்பது ஒரு வெடிப்பு என்பதோ அல்லது ஒரு சிறு புள்ளிக்குள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்து அங்கிருந்து எல்லாம் ஒரு வேதியியல் வினையில் தொடங்கின என்பதோ பிழையான புரிந்துணர்வு ஆகும்.

நிகழ்காலத்தில் எமது கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சம் (The Observable Universe) இன் அனைத்துக் கூறுகளும் அணுக் கருவில் உள்ள புரோட்டனின் பில்லியனின் பில்லியன் அளவு சிறிய வெளியில் இருந்து (இக்கட்டத்தில் வெளி அதாவது பிரபஞ்சம் விரிவடையத் தொடங்கவில்லை) வெளிப்பட்டன என்பது தான் சுருங்கச் சொன்னால் காலம் (Time) இன் தொடக்கம் தான் பிக்பேங் ஆகும்.

இந்த பிக்பேங் நிகழ முன்பும் இன்றும் எமது கண்களுக்குத் தெரியாது அதாவது Observable Universe இற்கு அப்பால் இருக்கக் கூடிய (கருதுகோள்) சக்தியும் சடமும் இருந்திருக்கும் என்பதும், எனவே பிரபஞ்சம் எப்போதும் எல்லைகள் அற்றது என்பதும் நாம் அறிய வேண்டிய ஒன்று ஆகும்.

இன்னொரு விதத்தில் கூறினால் நாம் கண்ணால் பார்க்கக் கூடிய பிரபஞ்சம் (The Observable Universe) மொத்தப் பிரபஞ்சத்தை (Whole Universe)விடவும் மிக மிகச் சிறியதும் ஆகும். இந்த கண்ணால் பார்க்கக் கூடிய பிரபஞ்சம் விரிவடையத் தொடங்க முன்பு அதாவது பிக்பேங் நிகழ முன்பு அதைச் சுற்றி அமைந்திருந்த இடத்திலும் சக்தியோ, சடமோ இருந்திருக்க முடியும். அல்லது எதுவுமே இல்லாதும் இருந்திருக்க முடியும். மேலும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கும் வெளியானது ஆரம்பத்தில் இருந்தே சக்தியால் நிரப்பப் பட்டே இருக்க வேண்டும்.

இதற்கு ஒரு மையமோ அல்லது அனைத்து சடமும் ஒடுங்கி இருந்து வெளிப்படும் புள்ளி என்ற ஒன்று கிடையாது என்பதோ குறிப்பிடத்தக்கது. மேலும் பிக்பேங் சமயத்தில் இருந்த ஆதிப் பிரபஞ்சம் மிக மிக அடர்த்தியானதாக இருந்ததற்கு பௌதிகவியல் சான்று இருக்கின்றது. ஆனால் இந்த ஆதிப் பிரபஞ்சம் இன்று இருக்கும் எந்தவொரு பிரபஞ்சக் கூறுடனும் ஒப்பிட்டு மிகவும் சிறியதாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது அறிவியல் நோக்கற்றது ஆகும்.

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்