கட்டுரைகள்
Typography

கரும் சக்தியானது பிரபஞ்சத்தை விரிவடையச் செய்வதல்ல என்பதுடன் அது பிரபஞ்ச விரிவாக்க வேகத்தை அதிகரிக்கச் (accelerating) செய்கின்ற சக்தி என்பதைப் புரிந்து கொள்வோம்.

இந்தக் கரும் சக்தியின் துணை இல்லாமலும் பிரபஞ்சம் விரிவடையக் கூடும். ஆனால் அது விரிவடையும் வீதம் குறைவடையக் கூடும். கடந்த சில பில்லியன் வருடங்களாக இந்தக் கரும் சக்தியின் துணையுடன் தான் பிரபஞ்ச விரிவாக்க வேகம் அதிகரித்து அல்லது ஆர்முடுகிக் கொண்டு வருகின்றது.

முதலில் கரும் சக்தி என்றால் என்ன? நிச்சயம் இது என்னவென்று நமக்குத் தெரியாது. இந்த ஒரு கூறுக்கு நாம் பெயர் வழங்கியுள்ளோம் என்பதால் அது என்ன என்பது குறித்து நாம் புரிந்து கொண்டுள்ளோம் என அர்த்தமாகி விடாது. பிரபஞ்சவியலில் (Cosmology) சில அவதானங்களை விளக்க நாம் கணிதவியல் சமன்பாடு மூலம் அறிந்துள்ள இரு கூறுகள் தான் கரும் சக்தியைத் தீர்மானிக்கின்றது. முதலாவது ஈர்ப்பு சக்தியுடனான அதன் தாக்கம் மற்றும் இரண்டாவது பிரபஞ்ச விரிவாக்கத்துடன் அதன் அடர்த்தி எவ்வாறு வேறுபடுகின்றது என்பது.

ஈர்ப்பு விசைக்கு மாற்றான விலக்கு விசையாக (Repulsive force - உதாரணத்துக்கு கடலில் அதன் ஈர்ப்புக் காரணமாக மூழ்குவதற்குப் பதில் மேல் எழும் நீர்க்குமிழிகளுக்கு ஒப்பான ..) பிரபஞ்சவியலில் அறியப் படும் கரும் சக்தியின் அடர்த்தி விரிவடையும் பிரபஞ்சத்தில் ஒரு மாறிலியாகக் (Constant) காணப்படுகின்றது. கரும் சக்தியின் இந்த அடிப்படைத் தன்மைகள் விரிவடையும் பிரபஞ்சம் தொடர்பான கணிதவியல் புரிதலுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளன.

கரும் சக்தியின் அடர்த்தியானது பிரபஞ்சத்தின் ஏனைய அனைத்துக் கூறுகளினதும் அடர்த்தியை முழுமையாக ஆக்கிரமிக்கும் கட்டம் வரை பிரபஞ்சம் விரிவடைந்து விட்டால் அதன் விலக்கு விசை ஈர்ப்பு விசையை மிஞ்சி விடும். இதனால் ஈர்ப்பு விசை காரணமாகவும், அதன் விலக்கு விசையான கரும் சக்தி அதில் செலுத்தும் செல்வாக்குக் காரணமாகவும் பிரபஞ்சத்தின் விரியும் வேகமானது அதிகரிக்கச் (accelerating) செய்யும்.

இதே நாம் நேர் எதிர்த் திசையில் கடந்த காலத்துக்குச் சென்றால் பிரபஞ்சத்தின் தோற்ற (பெருவெடிப்பு - BigBang) சமயத்தில் பிரபஞ்சம் மிகவும் வெப்பமாகவும், இன்றிருப்பதை விட மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்துள்ளது. ஆனால் எப்போதும் கரும் சக்தியின் அடர்த்தி சமம் என்பதால் பிர்பஞ்சத்தின் மிகவும் முற்பட்ட காலத்தில் கரும் சக்தியின் பங்களிப்பு மிகத் திருத்தமாகப் புறக்கணிக்கப் படக் கூடியது ஆகும். எனவே பிரபஞ்சத்தின் ஆரம்பக் கட்டங்களில் கரும் சக்திக்கு எந்தவொரு வேலையும் இருந்திருக்காது என ஊகிக்க முடியும். என்றாலும் அதன் தோற்றத்தில் கரும் சக்திக்குப் பங்கு இல்லையா என்பது குறித்து நிச்சயமாக சொல்ல முடியாது.

மீண்டும் முந்தைய விளக்கத்துக்கு வருவோம். நிகழ்காலத்தில் எமக்கு கரும் சக்தி என்றால் என்னவென்று திருத்தமாகத் தெரியாது. மேலே விளக்கப் பட்ட அதன் அம்சங்கள் இன்றைய பிரபஞ்சத்தின் அறியப் படாத தொகுதிகளை விளக்கப் பயன் படுத்தப் பட்டவை. இந்த அறியப் படாத தொகுதிகளை விளக்கும் கணிதவியல் சமன்பாடுகள் மூலம் பிரபஞ்சத்தின் செயற்பாட்டை யதார்த்தத்துடன் பொருந்தக் கூடிய கணிப்புக்களை வழங்க எமக்குக் கரும் சக்தி தேவைப் பட்டது. ஆனால் இந்தக் கணித சமன்பாடுகள் கரும் சக்தி என்றால் என்னவென்று நமக்குப் புலப் படுத்தாது. எனவே இந்தக் கரும் சக்தி குறித்து நாம் பின்வரும் கருதுகோள்களில் ஒன்றா எனப் பொருத்திப் பார்த்தாலும் எமக்குத் தெளிவான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.

அந்த முக்கிய கருதுகோள்கள் இவை :

1.அது அண்டவியல் மாறிலியா? (Cosmological constant)
2.இது வெற்றிடத்தின் பூஜ்ஜிய புள்ளி ஆற்றலின் வெளிப்பாடா? (manifestation of the vacuum zero-point energy?)
3.இது ஒரு அளவிடல் புலத்துடன் தொடர்புடைய சாத்தியமான ஆற்றலா? (potential energy associated with a scalar field?)

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

Source - Quora

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்