கட்டுரைகள்

பகுதி 1 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17644-who-faq-on-covid-19

பகுதி 2 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17658-covid-19-who-faq-part-2

பகுதி 3 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17669-who-faq-on-covid19-part-3

கடந்த தொடர்பில் யாரெல்லாம் முகக் கவசம் அணியலாம் என்பது குறித்தும், அதை எப்படிப் பாவிப்பது என்பது குறித்தும் பார்த்தோம். முகக் கவசங்கள் ஓரு தடவை பாவிப்பதில் இருந்து, தீயணைப்புப் படையினர் பாவிப்பது வரை பல வகைகள் உள்ளன. எந்தெந்த முகக் கவசம் யார் என்ன தேவைக்கு அணிய வேண்டும் என்ற விபரத்தை ஆங்கிலத்தில் நீங்கள் இந்த இணையத் தளத்தில் பார்வையிடலாம்...

https://www.businessinsider.com/types-of-masks-used-for-coronavirus-outbreak-n95-surgical-2020-3?r=US&IR=T

சாதாரணமாக கோவிட்-19 இற்கு பாவிக்கக் கூடிய முகக் கவசங்கள் 3 உள்ளன.

அதில் முதலாவது சர்ஜிக்கல் மாஸ்க் (Surgical Mask) :

இந்த முகக் கவசம் ஒரு தடவை மாத்திரம் பாவிக்கக் கூடியது. விலை குறைவு. ($0.25) இது கட்டாயம் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களும், அவர்களைப் பராமரிப்பவர்களும் மட்டுமே அணிய வேண்டும். இது சுகாதாரமான ஒரு நபரை நோயாளிகளுக்கு அண்மையில் இருக்கும் பட்சத்திலும், உங்களுக்குத் தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால் அருகில் இருப்பவரையும் பாதுகாக்கும். ஆனால் தவறாகப் பாவித்தால் உங்களுக்கு இக்கவசமே பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சுகாதாரமான ஒரு நபருக்கு சாதாரண சூழலில் இது அவசியமற்றது ஆகும்.

2 ஆவது N95 ரெஸ்பிரேட்டர் :

சுகாதார ஊழியர்களுக்கும், செவிலியர்களுக்கும் இது பரிந்துரைக்கப் படுகின்றது. (ஒரு முறை பாவிப்பு) இதை நீங்கள் ஒரு சுகாதாரமான நபராக இருந்து வாங்கும் பட்சத்தில் அவசியமானவர்களுக்குப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறீர்கள். (விலை $2 தொடக்கம் $4) இதை முறையாக அணிந்தால் 95% வீத காற்றில் பரவும் சிறிய தொற்றுக்களைத் தடுக்கின்றது.

3 ஆவது மீளப் பாவிக்கக் கூடிய முழு முகக் கவசம் (Full face respirator/Powered air-purifyingrespirator-reusable) :

இது சுவாச சிரமம் உள்ளவர்கள் பாவிக்கக் கூடிய அதிதிறன் முகக் கவசமாகும். (விலை $115) இந்தக் கவசம் ஊடாக தூய வாயுவை அனுப்ப முடியும் என்பதால் கோவிட்-19 தொற்று ஏற்பட்டு சுவாசிக்கச் சிரமமானவர்கள் பாவிக்க வேண்டிய முகக் கவசம் இதுவாகும். இன்றைய சூழலில் முழு சுகாதாரமானவர்கள் இதை விலைக்கு வேண்டினால் நீங்கள் எத்தனை நோயாளிகளுக்கு இந்த முகக் கவசத்தின் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றீர்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்..

 

கோவிட்-19 தொற்றுக்கான நோயரும்பு காலம் (incubation period) எவ்வளவு?

நோயரும்பு காலம் என்பது வைரஸ் தொற்றுவதற்கும், நோயின் அறிகுறிகளைக் காணத் தொடங்குவதற்கும் இடையிலான நேரம். கோவிட்-19 இற்கான நோயரும்பு காலத்தின் பெரும்பாலான மதிப்பீடுகள் 1-14 நாட்களிலிருந்து, பொதுவாக ஐந்து நாட்களில் இருக்கும். கூடுதல் தரவு கிடைக்கும்போது இந்த மதிப்பீடுகள் புதுப்பிக்கப்படும்.

 

விலங்குகளிடம் இருந்து கோவிட்-19 தொற்று மனிதனுக்கு ஏற்படுமா?

கொரோனா வைரஸ்கள் விலங்குகளில் பொதுவாகக் காணப்படும் வைரஸ்களின் பெரிய குடும்பமாகும். எப்போதாவது, மக்கள் இந்த வைரஸ்களால் பாதிக்கப் படுவார்கள், பின்னர் அது மற்றவர்களுக்கும் பரவக்கூடும். எடுத்துக்காட்டாக, SARS-CoV சிவெட் பூனைகளுடன் தொடர்புடையது மற்றும் MERS-CoV ட்ரோமெடரி ஒட்டகங்களால் பரவுகிறது. கோவிட்-19 இன் சாத்தியமான விலங்கு ஆதாரங்கள் இன்னும் உறுதிப் படுத்தப் படவில்லை.

உங்களைப் பாதுகாக்க, நேரடி விலங்கு சந்தைகளுக்குச் செல்லும் போது, விலங்குகளுடனான நேரடி தொடர்பையும் விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் மேற் பரப்புகளையும் தவிர்க்கவும். எல்லா நேரங்களிலும் நல்ல உணவு பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்யுங்கள். சமைக்கப்படாத உணவுகள் மாசுபடுவதைத் தவிர்ப்பதற்கும், மூல அல்லது சமைக்கப்படாத விலங்கு பொருட்களை உட்கொள்வதைத் தவிர்ப்பதற்கும் மூல இறைச்சி, பால் அல்லது விலங்கு உறுப்புகளை கவனமாகக் கையாளுங்கள்.

 

எனது செல்லப் பிராணியிடம் இருந்து கோவிட்-19 எனக்குத் தொற்றக் கூடுமா?

ஹாங்காங்கில் ஒரு நாய் தொற்று நோய்க்கு உதாரணம் இருந்த போதிலும், இன்று வரை நாய், பூனை அல்லது வேறு எந்த செல்லப் பிராணியும் கோவிட்-19 இனைப் பரப்ப முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோவிட்-19 முக்கியமாக பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது, தும்மும் போது அல்லது பேசும் போது உருவாகும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. உங்களைப் பாதுகாக்க, உங்கள் கைகளை அடிக்கடி மற்றும் முழுமையாக சுத்தம் செய்யுங்கள்.

இது மற்றும் பிற கோவிட்-19 தலைப்புகள் குறித்த சமீபத்திய ஆராய்ச்சியை WHO தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் புதிய கண்டுபிடிப்புகள் கிடைப்பதால் புதுப்பிக்கப்படும்.

தொடரும்...

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!