கட்டுரைகள்
Typography

முதலில் ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எப்போதும் எந்தவொரு பார்வையாளருக்கும் மாறிலி என்பதையும் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் எதுவும் பயணிக்காது என்பதையும் அறிந்து கொள்வோம்.

(ஒளியின் வேகம் : 299,792 Km/s) நீங்கள் மிக அதிக ஈர்ப்புப் புலத்தில் (Heavy Gravity) ஒளியின் வேகத்தில் ஏற்படும் தாக்கத்தை அறிந்து கொள்ள ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை மற்றும் கணிதவியல் கேத்திர கணிதம் (Goemetry) குறித்து சற்று அறிந்திருக்க வேண்டும்.

உண்மையில் ஈர்ப்புக்கான வளைந்துள்ள காலவெளியில் (Spacetime - Geometrical) வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்றால் என்னவென்பதைப் பிரகடனப் படுத்துவதே சவாலான ஒரு விடயமாகும். ஏனென்றால் ஒரு ஒளிக்கற்றைக்கு மிக அருகில் இருக்கும் பார்வையாளர் மிக அதிக தூரத்தில் உள்ளவர் அளவிடும் அதே வேகத்தை அளவிட மாட்டார் என்பதால் ஆகும்.

ஆனால் சார்புக் கொள்கைப் படி ( relativity) அண்டவெளியில் வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை அளவிடும் பல்வேறு நபர்கள் தமக்கிடையே எந்தெந்த இடைவெளியில் இருந்தாலும், அல்லது எந்தளவு வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தாலும் ஒரேயளவு ஒளி வேகத்தைத் தான் தமக்கு அருகே அளவிடுவர். ஆனால் மிகத் தூரத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இன்னொரு பார்வையாளருக்கு அருகேயுள்ள அதே ஒளிக்கற்றையின் வேகத்தை அளவிடும் போது சிலவேளைகளில் குறைந்தளவு வேகத்தையே உணர முடியும். இதற்குக் காரணம் குறித்த ஒளிக்கற்றையில் ஈர்ப்புப் புலம் ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். இந்த ஈர்ப்புப் புலம் எந்தளவு வலிமையாக உள்ளதோ அந்தளவு மெதுவாக அதற்கு அருகே உள்ள ஒளிக்கற்றை பயணிப்பதாக தூரத்தே உள்ள பார்வையாளர் உணர்வார். இது ஒரு அளவிடும் செய்கையில் ஏற்படும் விளைவு. முக்கியமாக நாம் இந்த அளவை மேற்கொள்ளும் நேரம் தான் தாமதமாகின்றதே தவிர ஒளியின் வேகமல்ல..

இந்த கவனிக்கத்தக்க வெளிப்பாடு ஷாப்பிரோ தாமதம் (Shapiro-delay) எனப்படுகின்றது. உண்மையில் இந்த தாமதத்துக்கு காரணம் கேத்திர கணித அடிப்படையிலாக காலவெளியில் ஏற்படும் விரிவாக்கமே (Spacetime dilation) ஆகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் சென்று கொண்டிருக்கும் விண்கலம் ஒன்று மிகவும் திணிவுடைய (வலிமையான ஈர்ப்புப் புலம் உள்ள) ஏதேனும் பொருள் உதாரணத்துக்கு எமது சூரியனைத் தாண்டி தனது சமிக்ஞைகளை அனுப்பும் போது, அல்லது பெறும் போது அவற்றின் வேகம் குறைவடைவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

Source - Quora

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்