கட்டுரைகள்

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது.

இது குறித்த சரியான விளக்கத்தை Advanscience தளத்தின் சீன மருத்துவ நிபுணர் குழுக்கள் தெரிவித்துள்ளனர். அந்த விளக்கம் வருமாறு :

சீனப் பாரம்பரிய வைத்திய முறைப்படி கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டர்கள் அதன் தாக்கத்தின் வீரியத்தைக் குறைத்துக் கொள்ள புதிதாக சூடாக்கப் பட்ட வெள்ளைப் பூடு நீர் உதவும் என சீன வைத்தியர் ஒருவர் நிரூபித்துள்ளார். மேலும் இந்த வெள்ளைப்பூடு சூப் பல நோயாளிகளுக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைப்பூடின் தோலை அகற்றி விட்டு 8 நறுக்கப் பட்ட பூண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 7 கோப்பை தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் இந்த வெள்ளைப் பூடுகளை இட்ட பின்பு மிதமான சூட்டில் இந்த நீரைப் பருகியும், பூண்டை உட்கொள்ளவும் செய்யுங்கள்.. ஒரே நாள் இரவில் உங்களது உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும். வெள்ளைப்பூடில் உள்ள சல்ஃபர் என்ற பதார்த்தம் எமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்தப் பாரம்பரிய முறை சாதாரண காய்ச்சலுக்குப் பலன் அளிக்கும் என்றாலும் நவீன கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலை இது முற்றிலும் தடுத்து நிறுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் HCQ சல்பேட் என்ற மருந்து வில்லையையும் கோவிட்-19 வைரஸினால் ஏற்படும் தொற்றினை சற்று தடுக்கக் கூடியது எனப்படுகின்றது. ஆனால் இதனைப் பொதுமக்கள் பாவனைக்குப் பயன்படுத்த முடியாது. அதற்கான காரணம் இது நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பாதிக்கும் Covid-19 போன்ற நோயாளிகளுக்கு எதிராக கடுமையான சவாலுடன் போராடும் மருத்துவர்களும், அந்த நோயாளிகளைக் கவனிப்பவர்களும் தமக்கு வைரஸ் தொற்று ஏற்படாது இருக்கப் பாவிக்க பரிந்துரைக்கப் படுவது தான். இதனைப் பரிந்துரைக்கும் ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, சாதாரண பொது மக்கள் இதனை ஏன் பாவிக்கக் கூடாது எனப் பின்வரும் பக்க விளைவுகளைக் கூறுகின்றனர் :

தலைவலி, தலைச்சுற்றல், பசியின்மை, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, தோல் அரிப்பு. இது அதிகப்படியான அளவு வலிப்புத் தாக்கங்களுக்கு இம்மருந்து வழிவகுக்கும் அல்லது நோயாளி மயக்கமடைவார் என்பதாகும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!