கடந்த வருடம் மார்ச் 21ஆம் திகதி இலங்கைத்திரு நாட்டில் நடந்த துயர்மிகு ஈஸ்டர் தின குண்டுதாக்குதல் சம்பவத்தில் 251 பேர் வரை மாண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்தமாக இறந்தவர்கள் அனைவரது ஆத்மாவிற்காக பிரார்த்தனைகள் தொடர்ந்து வரும் வேளையில் அவர்களின் சுயவிபரங்கள் தெரியாதவையே.
மேலோட்டமான நினைவுகூறல்கள் மட்டும் போதாது; உதிர்த்த ஞாயிறு அன்று அப்பாவியாக ஒன்றும் அறியாமல் உயிரை பறிகொடுத்தவர்களை தனித்தனியே வரைபடங்களாக நினைவுகூறவேண்டும் என எண்ணினார், இலங்கையைச் சேர்ந்த தகீரா ரிவாஃத் எனும் வடிவமைப்பு கலைஞர். (Designer + Illustrator)
"நான் ட்விட்டரைத் திறந்தபோது, மக்கள் சண்டையிடுவதையும், ஒருவருக்கொருவர் பல்வேறு விஷயங்களைக் குற்றம் சாட்டுவதையும் காண முடிந்தது," "நான் காலை 7 மணி வரை தூங்கவில்லை, இந்த வழியாகச் சென்றவர்களைப் பற்றி யோசித்துக்கொண்டேன்; அவர்கள் என்ன வகையான அதிர்ச்சியை உணர்ந்திருப்பார்கள் மற்றவர்களும் இதை உணர்ந்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் மக்கள் நேர்த்தியாக தொடர்பு கொள்வது போல் தோன்றவில்லை.” என்று தெரிவிக்கும் தகீரா, இதனையடுத்தே தான் இவ்வாறான நினைவுகூறலை செய்ய முடிவெடுத்தகாக கூறுயுள்ளார்.
இதற்கான தகவல்களை திரட்டி தனது சுய ஒப்படையாகவே ஆரம்பித்து இன்றுவரை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். Illustration எனும் கணனி காட்டூன் வரைபுபடங்களாக வரைந்து அவர்களின் பெயர் விபரங்கள் என சிறு குறிப்பையும் கூடவே இணைத்து நினைவுகூறும் இவரது படைப்புக்கள் ஒரு தனித்தன்மையை தருவது குறிப்பிடதக்கது.
இதுவரை 50ற்கும் மேற்பட்டவர்களை வரைந்துமுடித்திருக்கும் அவர் அத் தாக்குதலில் மரணித்த அனைவரையும் வரைய வேண்டும் என்பதே தனது குறிக்கோளாக செயற்பட்டுவருகிறார். சுமுகமற்ற இக்காலப்பகுதியிலும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருட நிறைவை அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.
நன்றி தகவலுதவி : roar.media
படங்கள் : instagram.com/tahirarifath/