இந்தியா

தீவிரமடைய தொடங்கியிருக்கும் கொரோனாவால் இந்தியாவில் கடந்த 24மணிநேரத்தில் 194பேர் பலியாகியும் 1 5833 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் மீண்டும் அங்கே ஊடரங்கு அமுல் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்று வீதம் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.

இதனிடையே நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பலி எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 ஆயிரத்து 4 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் எனவும் 64 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆகையால் இந்தியாவில் 15 833 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 27 நாட்களில், நான்கு மடங்காக உயர்ந்து உள்ளதாகவும், பலி எண்ணிக்கை 4 மடங்கை நெருங்கி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து வருகின்ற 31ஆம் திகதி கொரோனா தொற்றுப்பாதிப்பின் ஊரடங்கின் காலக்கேடு முடிவடைவதால் பிரதமர் அலுவலகம் இந்த ஊரடங்கை நீட்டிக்க செய்யும் மறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஜூன் 1 முதல் எவ்வாறு தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைத் தொடர்வது என்றும் இது குறித்து இறுதி ஆலோசனை மாநிலங்களுடன் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் டெல்லியில் சிலர் இதனை பொருட்படுத்தாமல் ஊடரங்கு விதிகளை மீறி செயற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்