கட்டுரைகள்

2000 ஆம் ஆண்டில் உலக ஏதிலிகள் தினத்தை நிறுவிய ஐ.நா.வின் கூற்றுப்படி, இப்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த ஆண்டின் கருப்பொருளாக "ஒவ்வொரு செயலும் கணக்கிடப்படுகிறது" என்று அறிவித்தது. கொரோனா நோய்ப்பேரிடரால் இந்த ஆண்டு நேரடி ஆதரவுச்செயல்களில் ஈடுபட மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏதிலிகளுக்கு உதவ இந்த மெய்நிகர் நடவடிக்கைகள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் நிகழ்வுகளில் (ஆன்லைனில்) சேர்ந்து பங்காற்றலாம் :

தற்போதைய சூழலில் ஆன்லைன் வசதியினூடே பல செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒன்றாக ஐ.நா பொதுச்சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மெய்நிகர் ஒவியக்கண்காட்சியைக் சென்று பார்வையிடலாம். அதாவது பல்கேரிய கலைஞர்களாலும் சில ஏதிலிகளாலும் படைக்கப்பட்ட ஓவியங்கள் இணைத்தளம் ஒன்றில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இணைப்பு : https://www.gobeyond.bg/

மேலும் உலகெங்கிலும் உள்ள ஏதிலிகளின் அனுபவங்களை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களின் தேர்வை இந்த இணைப்பில் சென்று காணலாம். அதோடு ஒன்பதாவது ஆண்டு ஏதிலிகள் திரைப்பட விழாவை பார்வையிடுவதன் மூலம் போராட்ட காலங்களில் பின்னடைவைப் பற்றி மேலும் அறியலாம்.

ஐ.நா. பொதுச்சபையின் அனுசரனையில் வழங்கப்படுகின்ற கூடுதல் மெய்நிகர் நிகழ்வுகளைக் காண, : இங்கே


ஆதரவு மற்றும் நன்றியுணர்வு செய்திகளை அனுப்பலாம் :

சர்வதேச மீட்புக் குழு 40 க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 20 க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களிலும் பணியாற்றியுள்ளது, உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிலருக்கு சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, பணம் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு, அத்தியாவசிய தொழிலாளர்களாக கடமையாற்றும் ஏதிலிகளுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளை அனுப்புமாறு அவ் அமைப்பு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்டுவிட்டர் இணைப்பு


நிறுவனங்களுக்கு நன்கொடை

சுத்தமான நீர், உணவு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இடங்களை வழங்குவதன் மூலம் ஏதிலிகளை ஆதரிக்கும் பல அமைப்புகள் முன் வரிசையில் உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஏதிலிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நீங்கள் நன்கொடை அளிக்கலாம்.

இவைதவிர ட்விட்டர் கணக்கில் தனித்துவமான மூன்று எமோஜிகளை பயன்படுத்தி ட்விட் செய்வதன் மூலமும் உங்களது ஆதரவுகளை பகிரலாம்.

நன்றி தகவல் உதவி : CNN

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து