கட்டுரைகள்

ஸ்டீரிமிங் மீடியாவான ஓடிடி சேவை, சினிமா மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தையும், அதன் எதிர் கால போக்கை எவ்விதம் தீர்மானிக்கும் என்பதையும், இவற்றின் பின்னே உள்ள தொழில்நுட்ப அடிப்படைகளையும் அலசும் சுவாரஸ்யமான தொடர்.

4தமிழ்மீடியாவில் வாரந்தோறும் வரவிருக்கும் இப்புதிய தொடரின் மூலம் பல்வேறு தொழில்களின் புதிய சிந்தனைகளை அறிமுகம் செய்து, அவற்றின் விளைவுகளை ஆராய்து பதிவு செய்யவுள்ள பிரபல தொழில்நுடபவியாளர் "சைபர் சிம்மன்" எமது வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. ஆனால் மிக நீண்ட நாட்களின் பின் 4தமிழ்மீடியாவில்  புதிய தொடர் மூலம் சிந்திக்கவும், சந்திகக்கவும் வரும் எழுத்தாளர் "சைபர் சிம்மன்" னுக்கு, ஒரு வசந்த வரவேற்பு !

இத் தொடரில் அவர் என்னவெல்லாம் சொல்லவுள்ளார் என்பது குறித்து அவரே தரும் அறிமுகம் கீழே...

ஓடிடி பற்றி இப்போது எல்லோரும் பேசுகின்றனர். இது தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இணையம் மூலம் படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் நேரடியாக வழங்கும் ஓடிடி வசதி திரையுலகிற்கான புதிய தொழில்நுட்ப பாதை என ஒரு தரப்பினர் உற்சாகம் கொள்கின்றனர். ஆனால், ஓடிடி திரையுலகை அழித்துவிடக்கூடும் என இன்னொரு தரப்பினர் அஞ்சுகின்றனர்.

இன்னொரு பக்கம் திரையரங்க உரிமையாளர்களோ, ஓடிடி வசதி திரையங்களை பாதித்து, சினிமாவை கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர். உள்ளங்கையில் வைத்து படம் பார்ப்பது, திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவத்தை அளிக்குமா? என்றும் கேட்கின்றனர். இதனிடையே புதிய தமிழ் படங்களும், இந்தி படங்களும் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கின்றன. லாக்டவுன் காலத்தில் வேறு வழியில்லை என்பதால், ஓடிடியில் வெளியிடுவது ஏற்ற வழியாக இருந்தாலும், இந்த நிலை தொடர்ந்தால் பாரம்பரியமான சினிமா தயாரிப்பும், வெளியிடும் பாதிக்குமே என்ற கவலையும் பலருக்கு இருக்கிறது.

ஓடிடி மேடை, திரையுலகின் மீது மட்டும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கவில்லை, பொழுதுபொக்கை நாம் அணுகும் விதத்தை இது மாற்றக்கூடியதாக இருக்கிறது. தொலைக்காட்சிகளும், ஓடிடியால் பெரும் மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன. ஓடிடி நுட்பம், பாரம்பரிய விநியோக முறைகளை தகர்த்துக்கொண்டிருக்கும் நிலையில், பொழுதுபோக்கு உள்ளடக்கம் ரசிகர்களை நேரடியாக சென்றடையவும் வழி செய்கிறது.

இது ரசிகர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குவதோடு படைப்பாளிகளுக்கும் புதிய வாயில்களை திறக்க கூடியதாக இருக்கிறது. ஸ்டூடியோக்கள் கோலோச்சிய இடத்தில் ஸ்டிரீமிங் நிறுவனங்கள் புதிய சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் பார்த்தால், பார்வையாளர்களின் ரசனையை துல்லியமாக குறி வைக்க, அல்கோரிதம்கள் புதிய கணக்குகளை போட்டுத்தருகின்றன. பிக்டேட்டா ஆயுதம் இன்னும் என்ன எல்லாம் செய்யும் என்று தெரியவில்லை.

இத்தகைய புதிய சவால்களை தொழில்நுட்பம் உண்டாக்கி இருந்தாலும், வெள்ளித்திரையில் ரசிகர்களை மகிழ்வித்த சினிமா, ஏ.ஆர் , வி.ஆர் போன்ற வளரும் நுப்டங்கள் மூலம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மர்சிவ் மீடியா என சொல்லப்படும் புதிய வகை கதை சொல்லல், முற்றிலும் புதிய வகை சினிமாவுக்கு வித்திடும் என்றும் சொல்லப்படுகிறது. திரையரங்குகள் காணாமல் போகும் என்று அஞ்சப்படுவதற்கு மாறாக, திரையரங்கில் பார்த்தால் மட்டுமே முழுமையாக அனுபவிக்க முடியும் எனும் வகையில் உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப நவீன திரையரங்களும் தொழில்நுட்ப மாய அரங்குகளாக மாறலாம் என்கின்றனர். எனில் எதிர்கால சினிமா எப்படி இருக்கும் எனும் சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது.

இந்த பின்னணியில் ஓடிடி எனும் ஸ்டிரீமிங்கின் தொழில்நுட்ப பின்னணி, அதன் வரலாறு ஆகிவற்றை திரும்பி பார்த்து, எதிர்கால சினிமாவின் திசையையும் 4தமிழ்மீடியாவில் வாரந்தோறும் வெளிவரும் இந்தப் புதிய தொடர் மூலம் அலசி ஆராயலாம் வாருங்கள் !

- சைபர்சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்