கட்டுரைகள்

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

நாம் வாழும் பிரபஞ்சத்தினைக் கட்டமைத்துள்ள அணுக்களின் மிக மிகச் சிறிய முக்கியத்துவம் வாய்ந்த துணை அணுத் துணிக்கைகளை (Sub Atomic Particles) காந்தப் புலத்தில் மிக அதிக வேகத்தில் அணுக்களை மோதவிடச் செய்து ஆய்கின்றது இக்கருவி.

இச்செயற்பாட்டின் மூலம் சேகரிக்கப் படும் கணணி, கணிதவியல், தரவுகள் மூலம் எமது பிரபஞ்சத்தின் தோற்றத்தில் இருந்து அதன் கட்டமைப்பு, பரிணாமம் மற்றும் அணுக்களின் கட்டமைப்பு, மிக நுணுக்கமான நேனோ கருவிகள் முதற்கொண்டு பல அறிவியல் தேவைகளை மனித இனம் நவீன யுகத்தில் நிறைவேற்றி வருகின்றது. சுவிஸ், பிரான்ஸ் எல்லையில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப் பட்டுள்ள இக்கருவியை சேர்ன் எனப்படும் (CERN - The European Organization for Nuclear Research) என்ற நாடுகளின் கூட்டு பௌதிக ஆராய்ச்சி நிறுவனம் இயக்குகின்றது.

கடந்த புதன்கிழமை ஜெனீவாவில் நடத்தப் பட்ட விஞ்ஞானிகளின் கூட்டு மாநாட்டில் இந்த LHC அமைந்துள்ள இடத்தில் புதிய இன்னும் மிகப் பெரிய துகள் முடுக்கி கருவி ஒன்றை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. LHC ஐ இரு இடங்களில் கடக்கும் வட்ட வடிவமான இந்தப் புதிய துகள் முடுக்கி அதனை விட 4 மடங்கு பெரிதாக அதாவது 100 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப் படவுள்ளது.

வருங்கால வட்ட வடிவ மோதுகைக் கருவி என்று பொருள் படும் விதத்தில் FCC (Future Circular Collider) என்று பெயரிடப் பட்டுள்ள இக்கருவி 21 பில்லியன் யூரோக்கள் செலவில் அமைக்கப் படவுள்ளது. ஏற்கனவே துணை அணுத்துணிக்கைகள் சம்பந்தமான கல்வியில் ஒரு பொருளுக்கு திணிவை அளிக்கும் துணிக்கை என்று கருதப் படும் ஹிக்ஸ் போசொன் என்ற துணிக்கையின் இருப்பு 2012 ஆமாண்டு இந்த LHC ஆய்வு கூடத்தில் பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த துணிக்கையின் முக்கியத்துவம் காரணமாக இது கடவுள் துணிக்கை என்று பொருள் படும் விதத்தில் ஆங்கிலத்தில் God Particle என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிரபஞ்சவியலில் (Cosmology) பிரபஞ்சத்தின் திணிவில் மிகப் பெரும் பகுதியைக் கொண்டுள்ள கரும் பொருளில் (Dark Matter) எவ்வாறான அணுக்கள் மற்றும் துகள்கள் இருக்கலாம் என்பது தொடர்பிலான ஆய்வில் கடவுள் துணிக்கையின் உதவி பெரும் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

1964 ஆமாண்டு பீட்டர் ஹிக்ஸ் உட்பட 3 பௌதிகவியலாளர்கள் இதன் இருப்பை ஊகித்திருந்தார்கள்.

நன்றி, தகவல் - தி புருஸ்ஸெல்ஸ் டைம்ஸ்

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

சினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது