கட்டுரைகள்

தமிழக அரசியற் களத்தின் காட்சிகள் பரபரப்பாகத் தொடங்கியிருக்கின்றன. திரையில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்ட ரஜினிகாந், அரசியற்களத்தில் ஆளுமையாகவும், வேடிக்கையாகவும், வெவ்வேறு கோணங்களில் பார்க்கவும் கருத்துக்கள் பகிரப்படவும் தொடங்கியிருக்கின்றன. இது குறித்த ஒரு விரிவான பார்வையாக வரும் மாதுமையின் ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? கட்டுரையை 4தமிழ்மீடியாவின் மாற்றுச் சிந்தனை மிக்க வாசகர்களுக்குத் சிறப்புத் தொடராகத்  தருவதில் மகிழ்வுறுகின்றோம். இத் தொடர்கட்டுரையின் மூன்றாவது பகுதி திமுகவை உடைக்கிறார் ரஜினிகாந்த் ?  - 4TamilmediaTeam

ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? பகுதி 1

ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? - பகுதி 2

திமுகவை உடைக்கிறார் ரஜினிகாந்த் ?

கமல் தனது தேர்தல் பிரச்சரத்தை மதுரையிலிருந்து தொடங்கியதைப் போல அல்லாமல், ரஜினி தனது அரசியல் பயணத்தை ஈரோட்டில் இருந்து தொடங்கப் போவதாக தகவல்கள் கிடைக்கின்றன. ரஜினி ஈரோட்டில் பேசும் பேச்சினை வேன் வாகனங்களில் பொருத்தப்பட்ட எல்.இ.டி திரையில் கொங்கு மண்டலம் முழுக்க ஒவ்வொரு நகரம் கிராமமாகக் கொண்டு செல்லும் டிஜிட்டல் பிரச்சாரத்தை செய்ய இருக்கிதாம் ரஜினியின் போர்ப்படை. அதேபோல கோவையை அடுத்து மதுரை, திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டிவனம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் பேசவிருக்கும் ரஜினி, இறுதியாக திருவண்ணாமலையில் பேசிவிட்டு பிரச்சாரத்தை முடிக்க இருக்கிறாராம். இந்தப் பேச்சுக்கள் ஒரே மாதிரி இல்லாமல் இருக்க தமிழருவி மணியன் அவருக்கான பேச்சுகளை உருவாக்கி வருகிறார் என்கிறார்கள்.

அதேப்போல ரஜினி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிரபல தொலைக்காட்சியில் 15 நிமிடம் பேசத் திட்டமிட்டிருப்பதுடன், தங்களது மக்கள் நல்வாழ்வு த்த்திட்டங்களை மோடி பாணியிலேயே சின்னச் சின்னக் குறும்படங்களாகத் தயாரித்து வெளியிட இருக்கிறார்களாம். ரஜினியின் இந்த டிஜிட்டல் பிரச்சாரம் இருக்கட்டும். தற்போது தனது தேர்தல் பிரச்சார வியூகங்களைத் தாண்டி கூட்டணிக் கணக்குகளை அர்ஜுன மூர்த்தியுடன் இணைந்து போடத் தொடங்கியிருக்கிறார் ரஜினி. அதில் மதுரை அரசியல் முக்கிய பகடை ஆகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

மதுரைக்கும் ரஜினிக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் 1975-ல் அவர் அறிமுகமானதும் தமிழகத்தில் முதல் முறையாக முத்துமணி என்பவர் முதன் முதலில் ‘ஸ்டைல் வில்லன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என்ற பெயரில் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அதேபோல, 1976-ல் ‘மூன்று முடிச்சு’ படத்தின் வெற்றிவிழா மதுரையில் நடந்தபோது அதில் கலந்துகொண்டு பேசினார் ரஜினி. அந்த வெற்றிவிழாவில் ரஜினியைப் பார்த்த விஜய்ராஜ் என்ற மதுரை இளைஞர் ரஜினியைப் போலவே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று எண்ணிக்கொண்டு, அவரைப் போலவே ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு வந்து தமிழ் சினிமாவில் விஜயகாந்தாக வெற்றிபெற்றார்.

அதேபோல 1979-ம் வருடம் சிவாஜியின் 200-வது படமான ‘திரிசூலம்’ படத்தின் வெற்றிவிழாவில் பேச மதுரை வந்தபோது, மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்புக் காவலர்களுக்கும் ரஜினிக்கும் வாக்குவாதம் முற்றி, அவர்களை அடிக்கப் பாய்ந்த ரஜினி, அதன்பின் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தச் சம்பவதிற்குப் பிறகு ரஜினியின் வாழ்க்கையில் அத்தனையும் சூப்பர் ஹிட் படங்களானது.

அதேபோல திமுக தலைவரின் மூத்த மகன்களில் ஒருவரும் திமுகவின் முன்னாள் தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த மு.க.அழகிரியுடன் கலைஞர் உயிருடன் இருந்த காலத்திலில் இருந்தே நட்பு பாராட்டி வந்தார் ரஜினி. முக அழகிரி வீட்டுத் திருமணங்கள் மதுரையில் நடக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் ஆஜராகிவிடுவார். அந்த அளவுக்கு நெருக்கமானவர் ரஜினி.

மேற்கு வங்க மாடல் தமிழகத்திலும்

தற்போது பாஜக, மேற்கு வங்கத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்துவந்த மம்தாவின் திரிநாமுல் காங்கிரஸ் கட்சியையே உடைத்துக் காட்டிவிட்டது. 5 எம்.எல்.ஏக்கள். ஒரு எம்.பி. இரண்டு மாநில அமைச்சர்கள் உட்பட பலரையும் விலைகொடுத்து வாங்கிவிட்டது. பாஜகாவிடம் விலைபோன அந்த திரிநாமுல் காங்கிரஸின் இரண்டாம் கட்டத் தலைவர் சுவேந்து அதிகாரி. அவருக்கு நான்கு கிழக்கு மாவட்டங்களில் செல்வாக்கு இருந்ததைக் கண்ட பாஜக இவ்வாறு செய்திருப்பதாக வங்காள ஊடகங்கள் எழுதிவருகின்றன. இப்படி விலைபோனவர்களை மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு பாதுகாக்கவும் பாஜக தவறவில்லை. திரிநாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பெருங்கூட்டத்துடன் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.

தற்போது மேற்கு வங்கத்தின் இதே மாடலை தமிழகத்திலும் பாஜக செய்ய இருப்பதாகவும் அதற்கு ரஜினி பரிந்துரை செய்திருக்கும் செல்வாக்கு மிக்க மனிதர் மு.க.அழகிரி என்ற பேச்சு தமிழகத்தின் அரசியல் வட்டாரத்தில் அணல் பறந்து வருகிறது. மு.க அழகிரிக்கும் தனக்குமான ஆழமான நட்பை பயன்படுத்திக்கொள்ள ரஜினி முன்வந்திருக்கிறார் என்றும் இதை எப்படி தேர்தல் அரசியலில் பயன்படுத்துவது என்பதை பாஜக திட்டமிட்டுக் கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அந்தத் திட்டம் இதுதான். மு.க.அழகிரி தனது தந்தை கலைஞரின் பெயரில் கட்சி தொடங்கச் செய்வது. அல்லது ஏற்கெனவே தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி மு.க.அழகிரியை தலைவராகத் தேர்ந்தெடுப்பது, அந்தக் கட்சியுடன் ரஜினியுடன் கூட்டணி அமைத்து திமுகவின் வாக்கு வங்கியிலிருந்து குறைந்தது 5 சதவீத வாக்குகளைப் பிரித்து ரஜினியின் தலைமையில் அமையப்போகும் மூன்றாவது அணிக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் திட்டம் என்கிறார். மு.க.அழகிரி கட்சி தொடங்க ஒப்புக்கொண்டால், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க பாஜக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறதாம்.

ஆதரவாளர்களின் விருப்பம் என்ன?

இப்படிப்பட்டச் சூழ்நிலையிதான் முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளில் இருந்த மு.க. அழகிரி, தற்போது சென்னையில் முகாமிட்டிருக்கிறார். அவரரை திமுகவில் சேர்த்துக்கொள்வார்களா, பாஜவின் விரும்பத்தின்படி புதுக்கட்சி துவக்கி, ரஜினியுடன் கூட்டணி அமைப்பாரா என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். சென்னை அண்ணா நகரில் உள்ள விடுதிகள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால் நிரம்பி வழிகிறது.

அழகிரியை, மீண்டும் தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் என, அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பவில்லை. சென்னை அறிவாலயத்தில், நேற்று மாவட்ட செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முதன்மை செயலர் கே.என்.நேரு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, 'அழகிரியை, மீண்டும் கட்சியில் சேர்ப்பீர்களா?' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, 'கட்சி தலைமை முடிவு செய்யும்' என்றார் நேரு. இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான் அழகிரி நேற்று மதுரையில் இருந்து, சென்னைக்கு காரில் வந்து சேர்ந்திருக்கிறார். கொரோனா நோய்த் தொற்று பற்றியெல்லாம் கவலைப்படாத அவர், தனது அரசியல் நிலைபாடு பற்றி இறுதி முடிவுசெய்வதற்காக ஒரு வாரம் சென்னையில் தங்குகிறாராம்.

இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் 4தமிழ் மீடியா சார்பில் பேசியபோது அழகிரி - ரஜினி கூட்டணியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற விவரம் பூனைக்குட்டிபோல வெளியே வந்தது. மதுரையைச் சேர்ந்த மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான அவர் நம்மிடம் கூறும்போது: “தி.மு.க.,வில் இருந்து இன்னும் தலைவருக்கு அழைப்பு வரவில்லை; ஆனால் அழைப்புக்காக இன்னும் இரு தினங்கள் காத்திருக்கலாம்’ என்று தலைவர் சொல்லியிருக்கிறார். தி.மு.க.,வில் தன்னை சேர்க்கவில்லை என்ற, இறுதியான முடிவு தெரிந்து விட்டால், புதிய கட்சியை, அழகிரி துவக்கி விடுவார். கட்சியை பதிவு செய்வது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவே, தற்போது, சென்னையில் தங்கியுள்ளார். தேர்தலில், ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஜினியுடன் அழகிரி, தொலைபேசி வழியாக, அடிக்கடி பேசி வருகிறார். தென் மாவட்டங்களில், 20 தொகுதிகளில் வெற்றி பெற, வியூகம் அமைத்துள்ளோம். நாங்கள் போட்டியிட்டால், குறைந்தபட்சம், தமிழகம் முழுதும், 5 சதவீத ஓட்டுக்களை பிரிக்க வாய்ப்புள்ளது. நாங்கள் ஓட்டுக்களை பிரித்தால், தி.மு.க., வெற்றி பாதித்து, ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும். திமுகவுக்கு அழகிரியைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தவறினால் லாபம் அடையப்போவது ரஜினிதான். ஆனால், அதில் என்னைப் போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை” என்றார்.

உண்மையில் ரஜினி வழியாக திமுகவை உடைக்க நினைக்கும் பஜாகவின் வியூகம், ரஜியி - அழகிரின் அரசியல் கணக்குகள் ஆகியவற்றை, அழகிரியை திமுகவில் சேர்த்துக் கொள்வதன் வழியாக மு.க.ஸ்டாலின் செயலிழக்கச் செய்துவிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அப்படி நடந்தால் அது உலகின் 8-வது அதிசயம் என்று வருணிக்கிறார்கள் திமுகவைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள். நாமும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்போம். அடுத்த அத்தியாயத்தில் ரஜினியை பாஜகவின் ‘பி டீம்’ என்று சொல்வது சரியா, தவறா என்பதை அலசுவோம்.

- ரஜினி அரசியல் தொடரும்

 -4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.