பாஜகாவின் பகடையாட்டம் முடிந்தது !
அரசியலுக்கு வரப்போவதில்லை, கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினியின் 3 பக்க அறிக்கை பல மறைமுக உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அதை அலசும்முன் ஜெயலலிதா, கலைஞர் ஆகிய இரண்டு தலைமைகளால் தமிழகம் சந்தித்த பின்னடைவுகளை ஓட்டிப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று யாருமில்லை. அதேபோல, மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி திமுகவிலும் தனக்குப் பின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளர்த்தெடுக்கவில்லை. வைகோ இரண்டாம் கட்டத் தலைவராக வளர்ந்து நின்றபோது, திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்பினாரோ அதேபோல, வைகோவையும் வெளியே அனுப்பினார். தனது மகன் மு.க.ஸ்டாலினையாவது அவர் இரண்டாம் கட்டத் தலைவராக வளர்த்தெடுத்தாரா என்றால், அதுவும் நடக்கவில்லை, ஸ்டாலின் ஆளுமையான தலைவராக உருவாகவில்லை என்பதே சாமானிய மக்களின் கருத்தாக இருக்கிறது.
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? பகுதி 1
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் ? - பகுதி 2
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 3
ரசிக்கக் கூடியதா ரஜினி அரசியல் : பகுதி 4
வெற்றிடத்தில் ஏற்பட்ட முட்டுக் கட்டை
அதேபோல, இலங்கை முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் விடுதலைப் புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்களப் பேரினவாதம் அழித்தொழித்தபோது திமுக வேடிக்கைப் பார்த்தது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும், கண் துடைப்புக்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திவிட்டு வேடிக்கைப் பார்த்தது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதும் தனது அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. இதனால், அடுத்து வந்த 2011 தேர்தலில் திமுகவை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். அதன்பிறகு இன்றுவரை திமுக ஆட்சிக் கட்டிலில் ஏற முடியவில்லை. திமுகவின் கடைசி 5 ஆண்டுகள் ஆட்சியில் தமிழக மக்களுக்கு கலைஞர்கள் பல நண்மைகள் செய்திருந்தாலும் நீட், ஹைட்ரோ கார்பன் அனுமதி, நியூட்ரினோ அனுமதி ஆகியவற்றுக்கு திமுக சம்மதிதிருந்தது இன்றுவரை அந்தக் கட்சியைப்பதம் பார்த்த்து வருகிறது. அதேபோல அவரது குடும்பத்தை சேர்ந்த தயாநிதி மாறன் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் சாட்டிலைட் தொழிலை வளர்த்துக் கொண்டதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை. இன்னொரு பக்கம், ஜெயலலிதாவும் சசிகலா குடும்பத்தினருக்கும் ஊழலில் திளைத்தனர். சிறை தண்டனையும் அனுபவத்தினர். இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவானது.
ரஜினியின் அறிக்கையும் பாஜக எதிர்பார்க்காத கிளைமாக்ஸும்!
இப்படிப்பட்ட சூழ்நிலைதான் சீமான் தலைமையிலான ‘நாம் தமிழர்’ கட்சியும் அது தீவிரமாக முன்னெடுத்துவரும் தமிழ் தேசிய அரசியலும் முழு வீச்சில் வளர்ந்து வருகின்றன. 2011 தேதர்லில் 2.5 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 2016 தேர்தலில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றது. உள்ளாட்சித் தேர்தல்களிலோ 12 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதுடன் 100 கிராம ஊராட்சிகளை வென்று காட்டி தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால், எப்போதும்போல் வாக்கு வங்கியை இழக்காத திராவிடக் கட்சிகளாக திமுகவும் அதிகமுகாவும் நீடித்து வந்த நிலையில், ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ‘தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை, அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது’ என்று கூறி 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி. பாஜகவின் ஆட்சியையும் மோடியையும் மறைமுகமாக அவர் அதரித்து வந்ததார். மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தால் தன்னால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று நம்பினார். ரஜினியின் இந்த அரசியல் ஆசையை, தமிழகத்தில் பாஜவை வளர்த்தெடுக்கவும் திமுகவை சாய்க்கவும் தனக்கான பகடைக் காயாக பாஜக பயன்படுத்திக்கொள்ள ரஜினியை பாஜக நிர்பந்தித்து வந்ததும் அதற்காக அர்ஜுன மூர்த்தியை அனுப்பி வைத்ததும் ‘அப்பன் குருதினுள் இல்லை’எனும் விதமாக பாஜவின் பகல்வேஷம் பட்டவர்த்தனமாக ரஜினியின் பின் வாங்கல் மூலம் கலைந்து விட்டது. இது பாஜக சற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸாக அமைந்துவிட்டது.
‘என் உயிர் போவதென்றால் அது தமிழக மக்களுக்காகப் போகட்டும்.’ என்று சொன்ன ரஜினி, தற்போது தனது உடலில் பொருத்தப்பட்டுள்ள மாற்றுச் சிறுநீரகம் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காக, தனது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து வைத்திருக்கும் மாத்திரைகளைச் சாப்பிட்டுவருவதால்,கட்சி ஆரம்பித்தபின் மக்கள் கூட்டத்துக்குள் செல்லமுடியாது என்று கூறிவிட்டார். தனது உயிருக்கும் உடல்நலனுக்குமே மருத்துவர்கள் உதவியுடன் தற்போது முன்னுரிமை அளித்திருப்பதாகக் கூறிவிட்டார். அதை தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
ரஜினியின் உண்மையான மனம் இதுவா?
‘அரசியலில் ஈடுபட உடல் இடம் தரவில்லை என்பது உண்மை என்றாலும், அவரது உள்ளமும் அதற்கு இடம் தரவில்லை என்ற உண்மையை அவர் நீண்ட நெடுங்காலமாக மறைத்து வந்தார் இப்போது அவர் உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வருவதில் இருந்து தன்னைவிடுவித்துக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்! இதை பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட போதே அறிவித்திருக்கலாம்! அல்லது இரண்டாவது கிட்னி டேமேஜ் ஆகி மாற்று பொருத்தபட்ட போதாவது அறிவித்திருக்கலாம்! குழப்பம், அதிகார மயக்கம், பேசுபடு பொருளாக இருக்க வேண்டும் என்ற புகழாசை, அரசியல் நுழைவை ஜவ்வாக இழுத்தடித்த தந்திரம், அரைகுறை மனசோடு அரசியல் முன்னெடுப்புகளை செய்த அவலம், தன்னலம் ஒன்றே குறிக்கோளாக அரசியல் எதிர்பார்ப்புகளை கிளறி பட வசூலை உயர்த்தி கொண்ட சாமர்த்தியம், முடிவை அறிவிக்க துணிவில்லாத தயக்கம்…ஆகியவற்றோடு வலம் வந்த ரஜினியின் அடையாளத்தை மறக்க முடியாது!’ என்பது பல அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.
ரசிகர்களுக்குத் தேவை ஆறுதலா?
உண்மையில் ரஜினியின் ஒரு தரப்பு ரசிகர்கள் அவரைத் தமிழக முதல்வராகக் கற்பனை செய்து பார்த்தார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ’வருங்கால முதல்வரே’, ’தமிழகத்தின் எதிர்காலமே’, ’ஊழலற்ற ஆட்சியை தர வரும் நம்பிக்கை நட்சத்திரமே’…என்று போஸ்டர்கள் அடித்து,பேனர்கள் வைத்து… அவரது அரசியல் வருகை தொடர்பாக நட்பு வட்டாரத்திலும், உறவுகள் வட்டாரத்திலும்…பேசிப்,பேசி நம்பிக்கையை பல்லாண்டுகளாக வளர்த்துக் கொண்டிருந்தனர்! அவர் அழைக்கும் போதெல்லாம் நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்னைக்கு ஓடிவந்தது, செலவழித்தது என்ற வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லட்சம்லட்சமாக இழந்துள்ளனர். ஆனால், ரஜினியின் மற்றொரு தரப்பு ரசிகர்கள், ‘தலைவர் நல்லா ஆரோக்கியமாக இருந்தாலே போதும். அவர் ரசியலுக்கு வந்தா சந்தோஷம், வரவில்லை என்றால் ரொம்ப சந்தோஷம்’ என்று கூறி வந்தனர். ஆக, ரஜினியின் ரசிகர்களுக்கு எந்த ஆறுதலும் தேவையில்லை என்பது தெளிவு. ரஜினி தனது அரசியல் நுழைவு விவகாரத்தை முற்றுபுள்ளி வைக்காமல், இழுத்தடித்து வந்ததில் அவரும், அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும் நல்ல பலனடைந்தனர். அதேநேரம் தேர்தல் நேரத்தில் ‘அரசியல் வாய்ஸ்’ கொடுக்கும் ரஜினி, வரப்போகும் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று சொல்லிவிட்டால், உண்மையாகவே ரஜினியின் மதிப்பு கூடும். அதைவிடுத்து பாஜகவுக்கு அவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட வாய்ஸ் கொடுத்தால் அவரது படங்களுக்கான வரவேற்பும் கூட தமிழகத்தில் குறைந்துபோய்விடலாம்.
முற்றும்
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை