கட்டுரைகள்
Typography

 நேற்று திங்கட்கிழமை சீனாவின் ஜியோசுவான் ஏவுதளத்தில் இருந்து 50 வயதுடைய ஜிங் ஹைபெங் மற்றும் 37 வயதுடைய சென் டாங் என்ற இரு விண்வெளி வீரர்களைத் தாங்கிக் கொண்டு ஹெங்ஸோ-11 என்ற விண்கலம் பூமியைச் சுற்றி வரும் சீனாவின் தியான் கோங் ஆய்வு கூடத்தை நோக்கிச் செலுத்தப் பட்டுள்ளது.

 இவ்விரு வீரர்களும் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்து தியான் கோங் ஆய்வு கூடத்தைக் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சீன விண்வெளி ஆய்வு நிலையம் விண்வெளியில் தனக்கென தனியாக அமைத்து வரும் ஆய்வு கூடம் தியான் கோங் ஆகும். 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கப் பட்ட இதன் முதற் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  இந்த ஆய்வு கூடம் 2022 ஆம் ஆண்டு முதல் செயற்படும் என ஏற்கனவே சீனா அறிவித்திருந்தது. கட்டமைப்புப் பணிகளை முடித்து விட்டு குறித்த இரு வீரர்களும் பத்திரமாகப் பூமியை வந்தடைவதற்கு ஏதுவாக புதிய விண்கலத்தை சீனா தயார் நிலையில் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

 

 

 

 

 
BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்