கட்டுரைகள்

அண்மையில் மத்திய இத்தாலியைத் தாக்கிய நிலநடுக்கங்கள் மற்றும் தொடர் அதிர்வுகளுக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய துகள்முடுக்கி ஆய்வகமான சேர்ன் (CERN) இனது hadron collider என்ற கருவியைக் குற்றம் சாட்டியுள்ளனர் சில முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ள அறிவியலாளர்கள்.

ஆனால் இதனைச் சேர்ன் ஆய்வு கூட விஞ்ஞானிகள் முற்றாக மறுத்துள்ளனர். ஒரு சிலரது கருத்துப் படி CERN ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத மிக வலிமையான சக்தியை வெளியிடுவதாகவும் இதனால் பூமியின் தரை அளிக்கும் எதிர்வினை நிலநடுக்கங்களை ஏற்படுத்தக் கூடியது எனவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. வேறு சிலரது கருத்துப் படி சேர்ன் இலிருந்து வெளியேறும் கண்ணுக்குப் புலப்படாத கதிர்ப்புக்களை இனம் கண்டு அறிவில் மேம்பட்ட வேற்றுக் கிரக வாசிகள் பூமியை முற்றுகை இடலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றது என்றும் சேர்ன் ஆய்வகம் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் அதற்கான காரணங்களை அனைவரும் விளங்கிக் கொள்ள முடியாது இருப்பது தான் துரதிர்ஷ்டம் என்றும் சேர்ன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். The BP earth watch organization, என்ற அமைப்பே ஆகஸ்ட்டில் 200 பேரைப் பலி கொண்ட நிலநடுக்கமும் அண்மைய நிலநடுக்கங்களும் இத்தாலியில் ஏற்படக் காரணம் சேர்னின் ஹட்ரொன் காலைடெர் துகள் முடுக்கியே எனக் குற்றம் சாட்டி அது தொடர்பான வீடியோ பதிவையும் YouTube இல் வெளியிட்டுள்ளது.

மேலதிகத் தகவல்களையும் வீடியோவையும் பார்வையிட

தகவல் : Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்