கட்டுரைகள்

நமது பூமியின் வளிமண்டலத்தில் தினசரி கண்ணுக்குத் தென்படாத சிறிய விண்கற்கள் வந்து மோதிய வண்ணமே இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை அளவில் சிறியன என்பதுடன் பூமியின் தரையில் மோதுவதற்கு முன்னமே வளிமண்டலத்தில் சிதைந்து விடுவதால் ஆபத்து ஏற்படுவதில்லை. மேலும் நமது வெற்றுக் கண்களுக்கும் மிக அரிதாகவே இவை தெரிகின்றன.

இதையும் மீறி அளவில் சற்று பெரிய விண்கற்கள் பூமிக்குள் நுழைந்தாலும் அவற்றில் பாதி வளிமண்டலத்திலேயே உராய்ந்து எரிந்து விடுவதால் அவை நிலத்தில் மோதினாலும் ஓரளவு வலிமையான அதிர்வலைகளை (Shock waves) மாத்திரமே எழுப்பும் என்பதுடன் அணுகுண்டுக்கு இணையான சேதத்தை ஏற்படுத்துவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவில் வீழ்ந்த விண்கல்லை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.  ஆனால் பூமியிலுள்ள மிகச் சக்தி வாய்ந்த அணுகுண்டு ஏற்படுத்தக் கூடிய சேதத்தை விட பன்மடங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதும் உயிரினங்களை வேரோடு அழிக்கக் கூடியதுமான சக்தி வாய்ந்த அளவில் பெரிய விண்கற்களும் நமது பால்வெளி அண்டத்தில் (Milkyway galaxy) உள்ளன.

இது போன்ற ஒரு பாரிய விண்கல் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியுடன் மோதியதால் தான் டைனோசர்களின் இனம் அழிந்தது என்ற ஓர் கருதுகோளும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகின்றது. இந்நிலையில் இது போன்ற இன்னொரு பாரிய விண்கல் எப்போது மோதும் என்று இன்னமும் கணிக்க  முடியாத நிலையில் அப்படிப்பட்ட ஒரு விண்கல் பூமிக்கு அண்மையில் நெருங்குகையிலேயே அதனைக் குண்டுகள் மூலம் தாக்கித் தூள் தூளாக்கும் தொழிநுட்பத்துக்கு இன்னமும் நாம் தயாராகவில்லை என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தத் தொழிநுட்பம் சில ஹாலிவுட் திரைப்படங்களில் சாத்தியம் போன்று காட்டப் பட்டிருந்தாலும் யதார்த்தத்தில் அத்தகைய நிலையைத் தாம் இன்னமும் அடையவில்லை என்றே அமெரிக்க வானியலாளர்கள் கூறுகின்றனர். மேலும் உலகில் யுத்தம், தொற்று நோய், அணுவாயுதப் போர், உயிரியல் போர் போன்று விண்கல் தாக்குவதால் ஏற்படும் அழிவுக்கும் டூம்ஸ்டே கடிகாரத்தை (Doomsday clock) திருகும் அடிப்படையில் குறித்த விண்கற்களை அழிக்கும் வல்லமை கொண்ட வெடிகுண்டுகளையும், அவற்றைத் தாங்கிச் செல்லக் கூடிய ரோபோட் விண்கலங்களையும் பூமியைப் பாதுகாப்பதற்காக விரைந்து உருவாக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வால்வெள்ளியோ (asteroid) அல்லது ஒரு விண்கல்லோ (meteor) நமது பூமியை முன்னெச்சரிக்கை இன்றியோ அல்லது மிகச் சிறிய முன்னெச்சரிக்கையுடனோ நமது பூமியுடன் மோதி பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடியது என்ற நிலமை இருக்க குறித்த விண்கற்களை விண்ணில் வைத்தே அழிக்கவோ அல்லது திசை திருப்பி விடவோ தேவையான தொழிநுட்பத்தை அடைய 7 பிரதான இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா திட்டம் தீட்டி வருவதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இருவர் படம் தோற்றதற்கான காரணம் குறித்து மணி ரத்னம் சொன்னதாக ஒரு விளக்கத்தை வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் வசந்த பாலன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

’விரும்புகிறேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சினேகா. பழம்பெரும் நட்சத்திரம் கே.ஆர்.விஜயாவுக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’ என்ற பட்டத்தைப் பெற்றார் சினேகா.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது