கட்டுரைகள்
Typography

எமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9 கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த Planet X இதுவரை எந்த செய்மதிகளாலும் அணுகப் படாத கிரகம் என்பதால் அதனைப் பற்றி நமக்கு எதுவுமே  தெரியாது என்று கூறும் வானியலாளர்கள் பெரும்பாலும் இதுவும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கு இணையாக இரும்பு மற்றும் ஐஸ் இனால் ஆனதாக இருக்கும் என ஊகிக்கப் படுகின்றது. இந்தக் கிரகம் கிட்டத்தட்ட சூரியனால் திருடப் பட்ட கிரகம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஒருவேளை இது போன்ற ஒரு பொருளால் தான் (Niburu)பூமியில் பல மில்லியன் வருடம் கோலோச்சிய டைனோசர்களின் உயிர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றும் கூறுகின்றனர்.

எனவே இந்த  Planet X பூமியின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழையும் பட்சத்தில் பூமியுடன் மோதினால் அது பாரிய அழிவை ஏற்படுத்தும் என்றும் அதனால் பூமியில் மனித வாழ்க்கை  மட்டுமன்றி உயிரின வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விடும் என்றும் அறிவியலாளர்கள் ஊகிக்கின்றனர். ஜனவரி மாதம் கலிபோர்னியாவிலுள்ள வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்தில் 9 ஆவது கிரகம் இனம் கண்டு பிடிக்கப் பட்டு விட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிகத் தகவல்களுக்கு : Mail Online

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS