கட்டுரைகள்

காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரியசக்தி எக்ஸ்ரே கருவிகள் அறிமுகம்செய்யப்பட்டு உள்ளது. 

வேகமாக தொற்றக்கூடிய காசநோயால் கானாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள்.மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் கொல்லப்பட்டதாக பதிவானவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். இப்போது வேகமாக
காசநோயை கண்டுபிடித்து அதிக உயிர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கானா நாட்டு அரசு, புதுமையானதொரு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கருவிகளை அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். 

இதன் மூலம் நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மின்சார வசதியும் இல்லாத தொலைதூர பிரதேசங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் காசநோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தவும் மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கவும் முடியுமென கானா அரசாங்கம் கருதுகிறது.