கட்டுரைகள்
Typography

நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும்.

1000 பூமி கிரகங்களை உள்ளடக்க  கூடிய வியாழனில்  400 mph வேகத்தில் காற்றுக்கள் வீசுவதாகவும் இது சூரியனில் இருந்து பூமியை விட 5 மடங்கு அதிக தொலைவில் உள்ள போதும் பூமியில் நிலவும் வெப்பமே வியாழனிலும் காணப் படுவதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.


இந்த வியாழக் கிரகத்தில் காணப்படும் ஆச்சரியப் படத்தக்க பகுதி அதிலுள்ள பாரிய சிவப்பு சுழல் ஆகும். இந்த சிவப்பு வாயு சுழலில் மூன்று பூமியை உள்ளடக்கலாம் என்றும் ஒரு சுழல் முடிவடைய 6 நாட்கள் எடுக்கின்றது  என்றும் கூறப்படுகின்றது. 17 ஆம் நூற்றாண்டிலேயே கலிலியோ இனால் தொலைக் காட்டியால் இனம் காணப் பட்ட அதிசயமான இந்த பாரிய சிவப்பு சுழல் (The Giant Red Spot) இன்று வரை வியாழனின் சுற்றுச் சூழல்  குறித்த கல்வியில் சவாலாகக் காணப்படுகின்றது.

பூமியில் ஏற்படும் ஹரிகேன் போன்ற புயல்களுக்கு ஒப்பான இந்த சுழலில் அதன் அளவும் நிறமும் காலத்துக்கு ஏற்ப சற்று மாறியே வருகின்றது. ஆயினும் வியாழனின் சுற்றுச் சூழலை வெப்பப் படுத்தும் மிக முக்கியமான சக்தி வெளிப்பாடு இந்த சிவப்பு சூழலில் இருந்து வெளிவருவதை மறுக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS