கட்டுரைகள்

2004 ஆம் ஆண்டு சனிக்கிரகத்தைச் சென்றடைந்த கஸ்ஸினி என்ற விண்கலம் தொடர்ச்சியாக 13 வருடங்கள் சனிக்கிரகத்தை சுற்றி வந்து வெற்றிகரமாக ஆய்வு செய்து வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அதில் உள்ள சக்தி நன்கு தீர்ந்து போய் விட்டிருப்பதாகவும் அதன் ஆய்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி வந்து விட்டதாகவும் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமாக செப்டம்பர் 15 ஆம் திகதி சனியின் தரையோடு மோதத் திட்டமிட்டுள்ள கஸ்ஸினி விண்கலம் ஏப்பிரல்  26 ஆம் திகதியளவில் சனியின் வளையத்துக்கும் கிரகத்துக்கும் இடைப்பட்ட
1500 Km விட்டமுள்ள இதுவரை அறியப் படாத வெளியினூடாகப் பயணிக்கும் விதத்தில் சுமார் 22 பாய்ச்சல்களை (dives) செய்யவுள்ளது. இதன் மூலம் சனிக்கிரகத்தின் சுற்றுப்புறம் எப்படிப்பட்டது என்பது குறித்த தகவல்களைப் பெறலாம் என்கிறது நாசா.

1997 இல் விண்ணுக்கு செலுத்தப்பட்ட கஸ்ஸினி 2004 இல் சனியை சென்றடைந்து அதன் வளையங்களையும் சந்திரன்களையும் ஆய்வு செய்தது. மேலும் ஹுயிஜென்ஸ் (Huyjens) என்ற ரோபோவை சனியின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனில் இறக்கி ஆய்வை விரிவு படுத்தியது. டைட்டனை இது எடுத்த புகைப் படங்கள் மூலம் அங்கு திரவ நிலையில் மெதேன் கடல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இவ்வாறு சனிக்கிரகம் குறித்து முக்கிய ஆய்வுப் பணியில் 20 வருடங்களைப் பூர்த்தி செய்த நிலையில் கஸ்ஸினி இவ்வருடம் செயலிழக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail Online

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்