கட்டுரைகள்

கடல்நீரைக் குடிநீராக்கும் கிராபீன் வடிகட்டி. செலவும் குறைவு;
சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கிராபீன் வடிகட்டி
கோடிக்கணக்கானவர்களின் குடிநீர் தேவையை, குறைந்த செலவில், சுற்றுச்சூழல்
பாதிப்பின்றி தீர்க்கவல்லது என அதை உருவாக்கிய ஆய்வாளர்கள் நம்பிக்கை
வெளியிட்டுள்ளனர்.கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் உலகில்
கோடிக்கணக்கானவர்களின் வாழ்வில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தவல்லது.

கடல்நீரிலிருந்து உப்பை பிரித்தெடுக்கக்கூடிய வடிகட்டி ஒன்றை தாங்கள்
கண்டறிந்திருப்பதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். உலகின் மிக
மெல்லிய பொருளாக அறியப்படும் கிராபீன் இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
லண்டனில் தற்போது செயற்பட்டுவரும் கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை
உருவாக்க 340 மில்லியன் அமெரிக்க டாலர் செலவானது. மேலும் அதை இயக்க
ஏராளமான மின்சாரம் தேவை.

இதற்கு மாற்றாக கிராபீன் வடிகட்டிகள் செலவு குறைந்த சுற்றுச்சூழலை
பாதிக்காதவைகளாக அமையும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.சோதனைச்சாலையில்
வெற்றிகரமாக செயற்படும் கிராபீன் வடிகட்டி சோதனைச்சாலைக்கு வெளியிலும்
அதே அளவு சிறப்பாக செயற்படுமா என்பது தான் விடை காண வேண்டிய கேள்வி