கட்டுரைகள்
Typography

உலகிலுள்ள ஏனைய விலங்குகளில் இருந்து மனிதன் தனித்துவமாக இயல்புகளை
கொண்டு விளங்குகின்றான்.

இவ்வாறு கூறுவதற்கு பிரதான காரணங்களாக மொழியைக் கையாளல் மற்றும்
விழிப்புணர்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. எனினும் நாளுக்கு நாள்
மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள் ஊடாக மனிதனின் தனித்துவத்
தன்மை இல்லாது போகின்றது.

காரணம் ஏனைய விலங்குகளிலும் அவ்வாறான சிறப்பியல்புகள் காணப்படுகின்றமை
ஆகும்.அவ்வாறே தற்போது மற்றுமொரு மனித இயல்பு குரங்குகளிடமிருப்பது
கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம்
காணப்படுகின்றது.இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக
நியூயோர்க்கிலுள்ள Rockefeller பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.

குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை FMRI (Functional Magnetic
Resonance Imaging) முறையில்ஸ்கேன் செய்து பார்த்த போதே இவ் உண்மை
வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை
போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்