கட்டுரைகள்
Typography

எதிர்வரும் ஜூன் 20 சர்வதேச அகதிகள் தினமாகும். உலகெங்கும் 65.3 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர். அவர்களில் 21.3 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள்.

10 மில்லியன் பேர் எந்தவொரு நாடையும் தனது சொந்த நாடாக உரிமைகோர முடியாத நிலையில் உள்ளவர்கள். 107, 100 பேர் வேறு இடங்களிலோ, நாடுகளிலோ அகதிகளாக மீள் குடியேற்றப்பட்டவர்கள்.

இன்றைய உலகின் 53% வீதமான அகதிகள், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மாத்திரம் வெளியேறியவர்கள். உலகில் அதிக அகதிகளை உள்வாங்கியுள்ள நாடுகளின் வரிசையில் துருக்கி (2.5 மில்லியன்) முதலிடத்திலும், பாகிஸ்தான் (1.6 மில்லியன்) இரண்டாம் இடத்திலும், லிபான், ஈரான், எதியோப்பியா மற்றும் ஜோர்தானியா ஆகிய நாடுகள் அடுத்த இடங்களிலும் உள்ளன.

இன்று அகதிகள் வருகையினால்  மிகத் திண்டாடி வருவதாக தம்மை காண்பித்து கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் இதுவரை அகதிகளாக தஞ்சமடைந்திருப்பவர்கள் உலகளவில் ஒப்பிடுகையில் வெறும் 6% வீதமானவர்களே.

39% வீதமான அகதிகள் மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆபிரிக்க நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஆபிரிக்க நாடுகளில் 29% வீதமானவர்களும், ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளில் 14% வீதமானவர்களும், அமெரிக்காவில் 12% வீதமானவர்களும் தஞ்சமடைந்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS