கட்டுரைகள்

நாசாவின் கெப்ளர் தொலைக் காட்டி அண்மையில் 219 புதிய பூமிக்கு ஒப்பான கோள்களையும் அவற்றில் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற 10 கோள்களையும் இனம் கண்டுள்ளது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நாசாவின் ஆமேஸ் ஆராய்ச்சி மையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இந்த 219 கோள்களுடன் சேர்த்து இதுவரை எமது பால்வெளி அண்டத்தில் பூமிக்கு ஒப்பான 4034 கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கெப்ளர் தொலைக் காட்டியால் மட்டும் 2300 கோள்கள் உறுதி செய்யப் பட்டுள்ளன. பூமிக்கு ஒப்ப தண்ணீர் இருப்பதற்கான உகந்த வெப்பநிலையுடன் கூடிய கோள்கள் மட்டும் 50 ஐ எட்டியுள்ளதுடன் இதில் 30 கோள்கள் உயிர் வாழ்க்கையைக் கொண்டிருக்கலாம் எனவும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. இவற்றில் பூமிக்கு மிக அண்மையில் K77-11 என்று பெயரிடப் பட்ட கோள் அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அதே வெப்பநிலையைத் தனது நட்சத்திரத்திடம்  இருந்து பெற்று வரும் இக்கோள் பூமியை விட சற்று பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, தகவல் : Mail Online

 

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்