Thursday, May 23rd

Last update03:25:40 PM

இன்று கூகுள் டூடிளை அலங்கரிப்பது Star Trek கதாபாத்திரங்கள்

உலகின் பிரபல Star Trek விண்வெளி தொலைக்காட்சி தொடர் தொடங்கப்பட்டு 46 வருடங்கள் கட்டந்துள்ள நிலையில் அதை கொண்டாடும் வகையில்,

கூகுள் டூடுள் தனது சின்னத்தை இன்று அலங்கரித்துள்ளது. இன்று டூடுளில் தெரியும் ஒவ்வொரு எழுத்துக்களும் அத்தொடரில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தை குறித்து நிற்பதுடன், அந்த எபிசாட்களில் வரும் சில காட்சிகளையும் மீண்டும் அனிமேஷன்களாக வடிவமைத்துள்ளது.

செயன்ஸ் பிக்ஷன் தொலைக்காட்சி தொடராக 1966ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட Star Trek ஐ Gene Roddenberry என்பவர் உருவாக்கியிருந்தார்.



இதே தொடர் பின்பு, அனிமேஷன் தொடர், அடுத்த தலைமுறைக்குரிய தொடர் என பல்வேறு வடிவங்களில் 6 புதிய தொலைக்காட்சி தொடர்களாக வெளிவந்தன. இந்த காரணங்களால் முதலாவதாக வெளிவந்த தொலைக்காட்சி தொடரின் பெயர் Star Trek : The Original Seiries என மாற்றம் செய்யப்பட்டது.

இவற்றை விட 11 ஹாலிவூட் திரைப்படங்களும் இக்கதையை மையப்படுத்தி வந்துள்ளன. தற்போது 12 வது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இறுதியாக 2009ம் ஆண்டு ஜே.ஜ்.ஏ அப்ராம்ஸ் இயக்கத்தில் Star Trek திரைப்படம் வெளிவந்தது.

இவற்றையும் பார்க்க தவறாதீர்கள்:

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus