இன்று கூகுளில் தெரிவது நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்பு
- Sunday, 07 October 2012 06:33
இன்று கூகுள் தனது ஹோம்பேச்சில் நீல்ஸ் போர் எனும் இயற்பியல் துறை அறிவியலாளரை நினைவுகூர்ந்துள்ளது.
டென்மார்க் கோப்பனாஃகனில் 1885 ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பிறந்த நீல்ஸ் போர் இயற்பியல் துறையில் புகழ்பெற்ற அறிவியலாளராக விளங்கினார். இவர் கோப்பனாஃகன் பல்கலைக்கழகத்தில் முதலில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்த போதும் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனத்தின் தங்கப்பதக்க போட்டிக்காக நீர்மப் பரப்பின் விசை பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதினார். அக்கட்டுரையே தங்கப்பதக்க பெரிசை பெற இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொண்டார்.

பின்நாட்களில் இயற்பியல் துறையில் அணுவியலில் அடிப்படை கருத்தாங்களை தந்திருந்தார். மேலும் குவாண்ட்டம் கொள்கை க்கும் இலகுவில் புரிந்துகொள்ள அடித்தளமான பங்களிப்புகளை செய்து அடிப்படை கருத்துக்களை முன்வைத்தார். குவாண்ட்டம் கருத்தியம் பற்றி ஐன்சுட்டைனுடன் இவர் நிகழ்த்திய கருத்துப்போர் புகழ்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நீல்ஸ் போர் 1922ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாது கால்பந்தாட்ட வீரராகவும் ஆர்வலராகவும் இருந்த நீல்ஸ் போர் 1962ல் நவம்பர் 18ல் மறைந்தார். 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் இன்றளவும் அறியப்படுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நில்சு போரின் பிறந்த தினத்தை நினைவு படுத்தும் விதமாக அணுக் கட்டமைப்பை மையப்படுத்தி கூகுள் தனது லோகோவை வடிமைத்து பெருமைபடுத்தியுள்ளது.
தகவல் : விக்கிபீடியா
இவர்களைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்:
