திரைச்செய்திகள்

ஜெய்யுடனான காதலுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டார் அஞ்சலி.

காரணம்? அது தெரிந்தால் ஏன் ஊர் வாய் சும்மாயிருக்கிறது? ஒரு காலத்தில் ஒரே வீட்டில் குடியிருந்த இருவரும் இப்போது தனித்தனியாக போய்விட, அரசியல் பக்கம் ஆசை காட்ட ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி.

அதுவும் ஆந்திரா அரசியல்தான் அவரது இலக்கு என்கிறார்கள். (சொந்த மொழியாச்சே?) இந்தப்பக்கம் அஞ்சலியின் பாரா முகத்தால் புல் மப்புக்கு ஆளாகி வருகிறார் ஜெய்.

நடுவில் ஒரு முறை லண்டனுக்கே போய் குடி மறப்பு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஜெய், மீண்டும் இப்படி சிக்கியதால் பலருக்கும் அதிர்ச்சி.

அதைவிட அதிர்ச்சி, சமீபத்தில் போலீசிடம் சிக்கி தன் லைசன்சை அவர் பறி கொடுத்த விஷயம். ஒரு காதல், கலர்புல்லாக இருக்கிறது. இல்லையென்றால் ஆளையே ஃபுல்லாக்கி காலி பண்ணுகிறது. அட காதலே... காதலே!

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!