இன்று கூகுளில் தெரிவது ஹெர்மன் மெல்விலின் மொபி-டிக் நாவல்
- Thursday, 18 October 2012 03:26
இன்று கூகுள் பிரபல நாவலாசிரியரான ஹெர்மன் மெல்வில்(Herman Melville) என்பவர் எழுதிய Moby‑Dick எனும் நாவலின் 161 வது நினைவு தினத்தை நினைவு கூர்ந்துள்ளது.
அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் 1819 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அலன், மரியா தம்பதியினருக்கு ஹெர்மன் மெல்வில் மகனாக பிறந்தார்.
பள்ளிக்கல்வியை முடித்த ஹெர்மன் 12வயதானபோது தந்தையை இழந்தார். எனிமும் அல்பனி அக்கடமியில் செந்நெறி இலக்கியம் பயின்றார். தொடர்ந்து குடும்ப வறுமை காரணமாக நியூயார்க்கைச் சேர்ந்த கப்பல் ஒன்றில் பணிக்குச் சென்றார். பின் நாட்களில் 1841லில் பசிபிக் பெருங்கடலுக்குச் சென்ற திமிங்கில வேட்டைக் கப்பலான அக்கூசுநெட்டில் பயணமானார். தனது வாழ்க்கை அன்றே தொடங்கியதாக கூறிய ஹெர்மன் மொபி-டிக் (Moby‑Dick) எனும் கடல் பயண வாழ்வின் அம்சங்களைக்கொண்டு நாவல் எழுதி வெளியீட்டார்.

இந்நாவல் பெரும் வரவேற்பைப் பெற்று ஹெர்மன் புகழ்பெற்றார். மொபி-டிக்கையடுத்து "டைப்பீ", "ஓமோ", "வைட் ஜாக்கெட் ஆகிய நாவல்களையும் தொடர்ந்து எழுதி வெளியீட்டார். மேலும் பல நூல்களின் மூலம் ஹெர்மனை ஒரு எழுத்தாளராகவும் சாகசச் செயல்களில் ஈடுபடுபவராகவும் இனங்காட்டிப் புழைத் தேடிக் கொடுத்தன.

ஆனால் இவருக்கு விரைவாக கிடைத்த இலக்கிய வெற்றிகளைத் தொடர்ந்து 1850 ஆண்டு நடுப்பகுதிகளில் "மார்டி" போன்ற நூல்கள் மக்களிடம் பெரிதாக வரவேற்பை பெறாதால் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தார், புகழும் மெல்ல குறையத்தொடங்கியதாக கூறப்படுகிறது. இதிலிருந்து மீள முடியாமல் போன ஹெர்மன் செப்டம்பர் 28 1891 ல் காலமானார். இவரை பலரும் முற்றாக மறந்திற நிலையில் 20ம் நூற்றாண்டில் ஹெர்மனின் படைப்புகளுக்கு "மெல்வில் மறுமலர்ச்சி" மூலம் மதிப்பு கிடைத்தது. உலக இலக்கியத்தினதும் தலைசிறந்த படைப்புக்களுள் ஒன்றாகப் மொபி-டிக் நாவல் புகழ் பெற்றது.
1851ம் ஆண்டு ஆக்டோபர் 18ல் ஹெர்மன் எழுதிய மொபி-டிக் நாவல் இங்கிலாந்தில் Richard Bentley என்பவரால் வெளியீடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஹெர்மன் மெல்வினை நினைவுபடுத்தும் விதமாகவும் அவர் எழுதிய புகழ் பெற்ற நாவலான மொபி-டிக் நூல் வெளியீடு கண்டு இன்றுடன் 161ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் கூகுள் இன்று தனது லோகோவை அலங்கரித்துள்ளது.
தகவல் : விக்கிபீடியா
இவற்றையும் காண்க:
